'தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையம்' வெளியிட்டுள்ள டைரி மற்றும் காலண்டர்களில் மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கவில்லை. மாறாக பிரதமர் மோடியின் படத்தை வைத்துள்ளனர். இதனால் கடும் எதிர்ப்பும்,து சர்ச்சையும் உருவாகியுள்ளது.

இதையொட்டி கருத்து தெரிவித்த அரியானா மாநில பா.ஜ.க அமைச்சர் அனில்விஜ், 'காந்தியின் பெயருடன் காதியை இணைத்த பின், நாட்டில் காதி தொழில் தலைதூக்க முடியாமல் போய்விட்டது. அழிந்தும் வருகிறது. காலண்டரில் காந்தியின் படத்துக்கு பதிலாக மோடியின் படம் இடம்பெற்றிருப்பது நல்ல விஷயம்.

அவரது படத்துடன் அச்சடிக்கப்பட்டதால் பண மதிப்பு இழப்பும் தொடங்கிவிட்டது. ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தியின் படம் படிப்படியாக நீக்கப்படும். காந்தியைவிட மோடியின் பெயருக்கு பிரபலமான வர்த்தக அடையாளம் உள்ளது' என்றார்.

இந்நிலையில், அனில் விஜ்ஜின் கருத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் ''சர்வாதிகாரிகளான ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோரும் சக்தி வாய்ந்த வர்த்தக அடையாளம்தான். அதற்காக அவர்களின் படங்களை பயன்படுத்த முடியுமா '' என்று குறிப்பிட்டுள்ளார்.