Asianet News TamilAsianet News Tamil

பதவி ஏற்குமுன் மோடி மரியாதை ! மகாத்மா காந்தி, வாஜ்பாயி சமாதிகளில் அஞ்சலி !!

இரண்டாவது முறை பிரதமராக இன்று பதவி ஏற்க உள்ள மோடி இன்று காலை 7 மணிக்கு மகாத்மா காந்தி மற்றும் வாஜ்பாயி நினைவிடங்களில் அஞ்சலி வெலுத்தினார்.
 

Modi paid homage to gandhi and vajpayee memoriel
Author
Delhi, First Published May 30, 2019, 7:40 AM IST

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. 

பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. என்றாலும் கடந்த 2014-ம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்த போது கூட்டணி கட்சிகளையும் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்டதை போல், இந்த முறையும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு அமைக்கிறது.

Modi paid homage to gandhi and vajpayee memoriel

நாடாளுமன்ற பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட மோடிக்கு, புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்து உள்ளார். இன்று பதவி ஏற்கிறார் அதை ஏற்று மோடி இன்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இன்று மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்காக கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Modi paid homage to gandhi and vajpayee memoriel

இன்று பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் மோடி மரியாதை செலுத்தினார். மோடியுடன் அமித்ஷா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். 

Follow Us:
Download App:
  • android
  • ios