340- க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதால் டெல்லியில் மாலை 5.30 மணிக்கு மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிமன்றக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.

 

இந்தக் கூட்டத்தில் பிரதமராக பதவியேற்க நாள் குறிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார். எப்போது நடத்தலாம் என அடுத்த கட்ட வேலைகளில் உற்சாகமாக இறங்கியுள்ளது.

இதற்கான தீவிர நடவடிக்கைகளில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் இரவுக்குள் முழுமையாக தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் புதிய அரசு பதவியேற்பு விழாவை நடத்தி முடிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.  வெற்றிபெறும் பாஜக உறுப்பினர்களை வரும் 25-ம் தேதி டெல்லிக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது.

பின்னர் வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. பாஜக உறுப்பினர்கள் கையெழுத்திடும் கடிதத்தை வைத்து குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க மோடி உரிமை கோர திட்டமிட்டுள்ளார்.