பன்னாட்டு நாடக தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரித்துள்ள குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, இந்தியாவில் மோடியைப் போன்ற தலைசிறந்த நடிகரைப் பார்த்ததில்லை, அவருக்கு நாடக தின வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துவரும் ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டரில் பிரதமர் மோடியைப் கிண்டல் செய்து  பதிவிட்டுள்ளார்.  அதில் நரேந்திர மோடிக்கு உலக நாடக தின வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

இன்றுவரை, இந்தியாவில் மோடியைப் போன்ற தலைசிறந்த நடிகரைப் பார்த்ததில்லை. அவரின் நடிப்புத் திறமை அற்புதமானது. குஜராத் முதலமைச்சராகவும்,  நாட்டின் பிரதமராகவும் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் அவருக்கு இந்நாளில் வாழ்த்து தெரிவியுங்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.  

ஜிக்னேஷின் பதிவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் பலர் பதிவிட்டு வருகின்றன. அதே நேரத்தில் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.