Asianet News TamilAsianet News Tamil

சீனா விவகாரத்தில் மோடி மீது சந்தேகம்... கேள்விகளால் துளைத்தெடுக்கும் ப.சிதம்பரம்..!

முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Modi is suspicion over China issue P Chidambaram pierced with questions
Author
Tamil Nadu, First Published Jul 4, 2020, 10:48 AM IST

முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.Modi is suspicion over China issue P Chidambaram pierced with questions

பிரதமர் மோடி, நேற்று திடீர் பயணமாக லடாக் சென்றார். அவருடன், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி நரவானே உடன் சென்றனர். லே பகுதியில், தரைமட்டத்திலிருந்து, 11 ஆயிரம் அடி உயரத்தில், உள்ள நிமு பகுதிக்கு சென்ற மோடி அங்கிருந்த வீரர்களிடையே உரையாற்றினார். அப்போது, ‛எல்லையை விரிவுபடுத்த துடிக்கும் நாடுகள், அதை கைவிட்டு, வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை. எல்லைகளை விரிவுபடுத்தும் காலங்களெல்லாம் மலையேறி விட்டது’’ என்று பேசினார்.

 Modi is suspicion over China issue P Chidambaram pierced with questions

இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா?

இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்?

 

ஒரு வாரத்தில் 3வது முறையாக சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசியுள்ளார். பெயர் கூறாத விரோதி பற்றி இந்திய மக்களிடமும் ஜவான்களிடமும் பேச வேண்டிய நோக்கம் என்ன? ட்ரம்ப், புதின் ஆகியோரிடம் பிரதமர் மோடி பேசும்போது சீன ஊடுருவுகிறது என்று குறிப்பிட்டாரா இல்லையா? எனக்கு ஆச்சரியமாக உள்ளது” என்று அவர் சந்தேகம் கிளப்பியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios