Asianet News TamilAsianet News Tamil

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு குறித்து மோடி நேரில் ஆய்வு: நாட்டு மக்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்க தீவிரம்.

இன்று காலை குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்து சேர்ந்தார். அங்கு  சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடல் காடிலா என்ற நிறுவன ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு  தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார். 

Modi interview on corona vaccine product, Intensity to provide vaccination to the people of the country as soon as possible.
Author
Delhi, First Published Nov 28, 2020, 2:06 PM IST

திட்டமிட்டபடி அகமதாபாத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பூசி உற்பத்தி  செய்யும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய பிரதமர் மோடி திட்டமிட்ட நிலையில் அவர் இந்த ஆய்வை  மேற்கொண்டுள்ளார். அதற்க்காக அவர் அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். 

Modi interview on corona vaccine product, Intensity to provide vaccination to the people of the country as soon as possible.

அதாவது ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்கொல்லி வைரஸிலிருந்து மீளமுடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் வைரஸை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட பல முன்னணி நாடுகள் தடுப்பூசியை உருவாக்கி அதை மனிதர்களுக்கு செலுத்தி, சோதித்து வருகின்றன. இந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து கோவி ஷீல்ட் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசியை பூனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் தயாரித்து விநியோகிப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளது இந்நிலையில் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஆகியவை இணைந்து இந்தியாவில் 15 நகரங்களில்  கோவி ஷீல்ட் தடுப்பூசி பரிசோதனையை நடத்தி வருகின்றன. 

Modi interview on corona vaccine product, Intensity to provide vaccination to the people of the country as soon as possible.

இந்நிலையில் உலகம் முழுவதும் கோவி ஷீல்ட் மூன்றாம் கட்ட பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில் மூன்றாம் கட்ட பரிசோதனையை அதிரடியாக வெளியிட்டுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தடுப்பூசி 80% ஆற்றல் மிக்கவை எனவும், இது மனிதர்களுக்கு செலுத்தும்போது 90% வரை பலனளிக்கிறது  எனவும் கூறியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி உற்பத்தி,வளர்ச்சி மற்றும் அதன் செயல் திறனை ஆய்வு செய்யும் வகையில் பிரதமர் மோடி இன்று காலை குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்து சேர்ந்தார். அங்கு  சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடல் காடிலா என்ற நிறுவன ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Modi interview on corona vaccine product, Intensity to provide vaccination to the people of the country as soon as possible.

அங்கு  தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார். அங்கு அந்நிறுவனம் தயாரிக்கும் ஜைகோவ்-டி  என்ற தடுப்பூசியின் இரண்டாவது கட்ட பரிசோதனையை குறித்தும் விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கும் சீரம், இன்ஸ்டியூட்  மற்றும் ஹைதராபாத்தில் உள்ள கோவிஷீல்ட் மருந்து தயாரிக்கும் பாரத் பயோ டெக் நிறுவனங்களிலும் அவர் ஆய்வு செய்ய உள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios