கொரோனா பெருந்தொற்றால் வேலையும் வருமானமும் இல்லாமல் அவதிப்படும் மக்களிடம் இப்படி அப்பட்டமாக கொள்ளையடிக்கும் அரசாங்கம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி, ஏழை மக்களுக்கு விலை உயர்வு என்பதுதான் மோடி அரசின் தாரக மந்திரமாக உள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 15 நாட்களில் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்த்தியிருப்பது பகல் கொள்ளையை விட மோசமானது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை சுரண்டும் இந்த விலை உயர்வை மோடி அரசு உடனே திரும்பப் பெற்று பழைய விலைக்கே கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தி லிட்டர் 40 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 86 ரூபாய்க்கு விற்று மக்களை சுரண்டுகிறது மோடி அரசு. அது போதாதென்று சமையல் எரிவாயு விலையையும் தன் விருப்பம் போல உயர்த்தி வருகிறது. கடந்த 12 நாட்களில் மட்டும் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி சிலிண்டர் விலை 610 ரூபாயிலிருந்து, 660 ரூபாயாக உயர்த்தப்பட்டது. டிசம்பர் 15 முதல் அது 710 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த மக்கள் விரோத போக்கை விசிக வன்மையாக கண்டிக்கிறது.
கொரோனா பெருந்தொற்றால் வேலையும் வருமானமும் இல்லாமல் அவதிப்படும் மக்களிடம் இப்படி அப்பட்டமாக கொள்ளையடிக்கும் அரசாங்கம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி, ஏழை மக்களுக்கு விலை உயர்வு என்பதுதான் மோடி அரசின் தாரக மந்திரமாக உள்ளது. ஏழை நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். பழைய விலைக்கே எரிவாயு சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 17, 2020, 10:39 AM IST