பிரதமரான பிறகு அரசியமைப்புச் சட்டத்தின் முதல் வரியே மோடிக்கு பிடிக்காமல் போய்விட்டது.. முதல்வர் ஸ்டாலின்..!
முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமையை பேசிய மோடி பிரதமரான பிறகு அதை பறிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களை ஒழிக்க வேண்டும் அல்லது மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது.
முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமையை பேசிய மோடி பிரதமரான பிறகு அதை பறிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா குரல் (Speaking4India) ஆடியோ சீரிஸ்சின் மூன்றாவது பாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புதமான பூந்தோட்டம். அதை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது. முதலமைச்சராக மாநில உரிமை பற்றி பேசிய மோடி, பிரதமராகி மாநில உரிமைகளை பறிக்கிறார். மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது.
இதையும் படிங்க;- ஆளுநர் ரவி பாஜகவினராகவும், ஆளுநர் மாளிகை பாஜக கட்சி அலுவலகமாகவும் மாறிவிட்டது... வெட்கக்ககேடு- சீறும் ஸ்டாலின்
ஆர்.எஸ்.எஸ். விரும்பும் சர்வாதிகார ஆட்சியை அமைக்க பாஜக முயற்சிக்கிறது. பிரதமரான பிறகு அரசியமைப்புச் சட்டத்தின் முதல் வரியே மோடிக்கு பிடிக்காமல் போய்விட்டது. முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமையை பேசிய மோடி பிரதமரான பிறகு அதை பறிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களை ஒழிக்க வேண்டும் அல்லது மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பாஜக ஊழலை அம்பலப்படுத்திய சிஏஜி அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். ஒன்றிய பாஜக அரசின் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன. இந்தியா ஜனநாயகத்தை காப்பற்ற போராடும் கட்சியாக திமுக விளங்குகிறது. திமுக கொள்ளைகளில் முக்கியமானது மாநில சுயாட்சி. இந்தியா கூட்டாட்சித் தன்மை கொண்ட நாடு. இங்கு பல்வேறு சமூக மக்கள் வாழ்கின்றனர்.
இன்றைக்கு ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விரும்பும், சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியை உருவாக்க நினைக்கிறது. அதனால்தான் அவர்கள் அரசியல் சட்டப்படியும் ஆட்சி நடத்தவில்லை; மாநிலங்களையும் மதிக்கவில்லை. மாநிலங்களைச் செயல்படவிடாத ஒன்றிய அரசு, மாநில அரசின் சம்பளத்தைப் பெற்று மாநில நலனுக்கு எதிராக செயல்படுகிற ஆளுநர்கள், இவர்களை வைத்துக்கொண்டே எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களால் செய்ய முடிகிறது என்றால், கூட்டாட்சி நெறிமுறைகளை மதிக்கும் ஒரு ஆட்சி, ஒன்றியத்தில் அமைந்தால், எல்லா மாநிலங்களும் மேலும் செழிக்கும்.
இதையும் படிங்க;- பிரதமர் ஆகும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன நெத்தியடி பதில்..
மாநில சுயாட்சி என்ற கொள்கை வெல்ல வேண்டும் என்றால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு மக்கள் தயாராக வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மினி நாடாளுமன்றத் தேர்தலாகப் பார்க்கப்படும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கிறது. அதில் வாக்களிக்கப் போகும் வாக்காளப் பெருமக்களும் இதை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிறைவாக, இந்த எபிசோடைக் கேட்ட உங்களிடம் உரிமையோடு நான் கேட்பது, இந்தியா கூட்டணியின் கையில், இந்தியாவை ஒப்படையுங்கள். மாநிலங்களைக் காப்போம்! இந்தியாவைக் காப்போம்! இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.