ஜி7 மாநாடு முடித்த கையோடு பாரத பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை வரவுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி படுதோல்லி அடைந்துள்ள நிலையில் அவர் சென்னை பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

காஷ்மீர் விவகாரம்,  மற்றும்  இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானின் சதி வலை பின்னல் , மற்றும் சர்வதேச நாடுகளை இந்தியாவிற்கு சாதகமாக அணியமாக்கும் முயற்ச்சி என படு பிசியாக சுற்றிச்சுழலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,  வரும் செப்டம்பர் 30ம்தேதி சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் நடைபெறும்   நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். 

 இது தொடர்பாக ஐஐடி கல்வி நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது,  அதில் பழமை வாய்ந்த ஐஐடி கல்வி நிறுவனம் தனது வைர விழாவை கொண்டாட உள்ளது,வரலாற்று சிறப்பு மிக்க அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

தங்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர்  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி செப்டம்பர் 30 அன்று ஐஐடியில் மாணவர்கள் மத்தியில் பிரதமர் உரை நிகழ்த்த உள்ளார்  என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஐடி கல்வி நிறுவன நிகழ்ச்சி முடித்த கையோடு அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியனரையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தக்கவல்கள் தெரிவிக்கின்றன, நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப்பின் உள்துறை அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவருமான அமித்ஷா சென்னை வந்து சென்றுள்ள நிலையில் ,பிரதமர் மோடியின் வருகை தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. பிரதமர் மோடி சென்னை வரும்போது தமிழக முதல்வர் மோடியை சந்தித்து முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.