அண்மையில் உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி,  ராஜீவ் காந்தியை மிஸ்டர் கிளீன் என்று சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. போபர்ஸ் வழக்கில் சிக்கிய உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது என கடுமையாக பேசினார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் கடலோர எல்லையை பாதுகாக்க உதவும் போர்க்கப்பல். அதை சொந்த கொண்டாட்டத்திற்கு பயன்படுத்தினார். இந்திய போர் கப்பல்களில் வெளிநாட்டு மக்கள் செல்ல கூடாது. ஆனால் ராஜீவ் காந்தி தனது இத்தாலி மச்சான்களை அதில் அழைத்து சென்றார். இப்படித்தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருந்தது என்று தாறுமாறாக விமர்சித்தார்.

மேலும் இது தொடர்பான செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில்  ஷேர்  செய்த மோடி, து இதை அதிகம் பகிருங்கள்  என்றும் கோரிக்கையும் வைத்து இருக்கிறார். மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி மீது தொடர்ந்து மோடி குற்றச்சாட்டுக்களை கூறி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.