நாட்டில் பா.ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர், துணை முதல்வர்களுடன், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

இந் கூட்டத்தில், மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள், சமூக நலத்திட்டங்கள் ஆகியவை எவ்வாறு நடந்து வருகிறது என்பது குறித்து விவாதித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. 

13 மாநிலங்களின் முதல்வர்கள், 6 துணை முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் சிலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.

கடந்த 214ம் ஆண்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், முதல்வர்களுடன் பிரதமர் மோடி சந்திக்கும் 3-வது கூட்டமாகும்.ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியஜனதா தளம் கட்சி சேர்ந்ததற்கு பின், கடைபிடிக்கப்படும் முதல் பயிற்சியாகும்.

2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்ட அறிக்கையை தேசியத் தலைவர் அமித் ஷா வௌியிட்ட சில நாட்களுக்குள் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, அதன் நிலை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும். மேலும், 2019ம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்ட அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படும்.