modi and amithsha target on rajinikanth

ரஜினியின் ‘ஆன்மிக அரசியல்’ பாஜக வின் தலையீடு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை சமூகவலைதலங்களில் வைரலாகிறது.

‘‘ரஜினியின் ‘ஆன்மிக அரசியல்’ அறிவிப்பு வெளியிட்டதும், தமிழக பஜக-வின் அனைத்து மட்டங்களிலிருந்தும் ஆதரவு வரத் தொடங்கியது. ‘மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்று பாஜகவின்-யினர் வெளிப்படையாக வாழ்த்து சொன்னார்கள்.

இன்னொரு பக்கம் தமிழக பாஜகவின் ‘மென்ட்டர்’ என்று கருதப்படும் ஆடிட்டரின் குருமூர்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘ரஜினியின் அரசியல் வருகை தமிழகத்தை 60 ஆண்டு காலமாக உறைய வைத்திருக்கும் திராவிட அரசியலுக்கு மாற்றாக இருக்கும். ரஜினியின் ஆன்மிக அரசியல், தமிழகத்திலும் வெளியிலும் இருக்கும் மற்ற யாருடையதை விடவும் மோடியின் அரசியலுக்கு நெருக்கமாக இருக்கிறது’ Rajni's entry into TN politics will hopefully bring about tectonic changes in the 60 year old frozen Dravidian politics. His spiritual politics is nearer to Mod' s than to any one else in Tamil nadu or outside. என பதிவிட்டிருந்தார்.

அதேபோல பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் ட்விட்டரில்

The suspense in politics of Tamil Nadu about Sh. @superstarrajini ji's future action is over ! BJP has always welcomed persons with sincerity & commitment to join the politics so as to improve the governance and delivery to poor. தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கையில் பாஜகவின் தலையீடு அதிகம் இருப்பதாக பலருக்கும் சந்தேகம் அதேசமயத்தில், பாஜகவை - சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியே எதிர்க்கிறாரே என்ற மற்றொரு சந்தேகம்...

‘‘அவர் பி.ஜே.பி அலுவலகத்தில் இருக்கிறாரே தவிர, பி.ஜே.பி-யில் இருக்கிறாரா? அவர் தினகரனை ஆதரித்தார்; ஆனால், பி.ஜே.பி ஆதரிக்கவில்லையே? தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பி.ஜே.பி இரண்டு விஷயங்களுக்காகக் காத்திருந்தது. ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் தோற்றுவிடுவார், 2ஜி வழக்கின் தீர்ப்பு தி.மு.க-வின் கதையை முடிக்கும் என்று நினைத்தார்கள். இந்த இரண்டுமே நடக்கவில்லை.

இந்த நிலையில், மக்கள் செல்வாக்குள்ள ஒருவரைக் களத்தில் இறக்காமல் பி.ஜே.பி-யை வளர்க்க முடியாது என்று புரிந்துவிட்டது. இதற்காகத்தான் டிசம்பர் வரை ரஜினியை அமைதியாக இருக்கச் சொன்னார்களாம். இரண்டு முடிவுகளும் வந்ததும் ரஜினியை வெளியே அழைத்து வந்துவிட்டார்கள். இப்படித்தான் காட்சிகளை விவரிக்கிறார்கள், உள்விவரங்களை அறிந்தவர்கள்.”



 பாஜகவிற்கு நெருக்கமான ரஜினியின் ‘ஆன்மிக அரசியல்’?

‘ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வர் வேட்பாளராக ஆனால் மட்டுமே, தமிழகத்தில் மாற்று அரசியல் முயற்சிகள் தலைதூக்கும்’ என்று நினைக்கிறதாம் டெல்லி மேலிடம். ‘மத்திய அரசின் ஆசிபெற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற பேச்சுதான் ஆர்.கே,நகரில் ஆளுங்கட்சியினரை தோற்கடித்தது. பாஜகவை நோட்டவோடு சண்டைபோட விட்டது என பாஜகவை தூக்கிப்போட்டு பந்தாடியது. அதனால், பிஜே.பி-யோடு தொடர்பில்லாத தனிக்கட்சியை ரஜினி ஆரம்பிப்பது தான் நமக்கு நல்லது. ரஜினி நம்ம ஆளுன்னு யாருக்கும் தெரியக்கூடாது, அவரின் வெற்றி நம்மோட வெற்றி என்று நினைக்கிறாராம் அமித்ஷா. அதனால்தான் ரஜினிக்காக மோடியும் அமித்ஷாவும் காத்திருந்தார்களாம்.