சென்னை மாவட்ட வடக்கு பொறுப்பாளர் பிரியதர்ஷினி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் கொடுக்க தலைமை செயலகத்துக்குள் புகுந்த பெண் நிர்வாகி தனது கட்சியினருடன் சென்றுள்ளார். மேலும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என கமல்ஹாசன் தெரிவித்துள்ளதற்கு நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தங்களது கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பிஜேபி லீடர் தமிழிசை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் தொடர்ந்து தங்களது கண்டனத்தை பதிவு  செய்து வருகின்றனர். அதுவும் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். 

அவருக்கு நாக்கில் சனி. தீவிரவாதத்திற்கு மதமெல்லாம் கிடையாது. இந்துதான் முதல் தீவிரவாதி என்று கூறி சிறுபான்மையினரின் ஓட்டை வாங்குவதற்காக நடிக்கும் கமல்ஹாசனின் நாக்கை ஒரு காலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள். ஏன்னா ரொம்ப பேசுகிறார். இவ்வளவு பேச்சு தேவையில்லை. ஏன் பேசுகிறார், யார் சொல்லிப் பேசுகிறார்? இந்துதான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்கிறார். இவருக்கு என்ன தெரியும்? என்றெல்லாம் கமல்ஹாசனை ஒருமையில் பேசினார்.

இந்நிலையில்; மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் சென்னை மாவட்ட வடக்கு பொறுப்பாளர் பிரியதர்ஷினி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக புகார் கொடுக்க தலைமை செயலகத்துக்குள் புகுந்த பெண் நிர்வாகி, தனது கட்சியினருடன் சென்ற அவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். கொளத்தூர் மற்றும் திரு.வி.க நகர் பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். அமைச்சருக்கு எதிராக புகார் அளிக்க ஒரு கட்சியின் நிர்வாகிகள் கூட்டமாக புகார் அளிக்க சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.