Asianet News TamilAsianet News Tamil

கமல் மன்றத்தினரே இல்லாத மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் !! முதல் பட்டியலில் கமல் . ஸ்ரீபிரியா இல்லை !!

கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லாத மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியலை நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார்.

MNM candidate list
Author
Chennai, First Published Mar 20, 2019, 11:49 PM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் என அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார்.

MNM candidate list

அதன்படி  மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் 21 வேட்பாளர்களின் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். அதில் 50 சதவீதம் தொழிலதிபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்..

MNM candidate list

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடாளுமன்றத் தேர்தல் – 2019 மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பட்டியல் நமக்கான அரசியல் நமக்கான கட்சி என்கின்ற உயரிய நோக்கத்துடன் என்னைப் போல் முன்வைக்கப்பட்டு நமக்கான ஆட்சி அமைக்க வேண்டி ஏப்ரல் 18 ஆம் தேதி  நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

MNM candidate list

1. திருவள்ளூர் (தனி)  - டாக்டர். லோகரங்கன்.
2. வடசென்னை - ஏ.ஜி.மௌர்யா.
3.  மத்திய சென்னை  - கமீலா நாசர்
4. ஸ்ரீ பெரும்புதூர்  - சிவக்குமார்
5. அரக்கோணம் -  என்.ராஜேந்திரன்
6. வேலூர் -  ஆர்.சுரேஷ்
7. கிருஷ்ணகிரி - ஸ்ரீ.காருண்யா
8. தர்மபுரி - ராஜசேகர்
9. விழுப்புரம்  (தனி). – அன்பில் பொய்யாமொழி (நிறுவனர் தலித் முன்னேற்றக் கழகம்)
10. சேலம்- பிரபு மணிகண்டன்
11. நீலகிரி - ராஜேந்திரன்
12. திண்டுக்கல்- டாக்டர் சுதாகர்
13. திருச்சி - ஆனந்தராஜா
14. சிதம்பரம் – டி.ரவி
15. மயிலாடுதுறை- ரிஃபாயுத்தீன்
16 நாகப்பட்டினம்(தனி) - குருவைய்யா
17 தேனி – எஸ்.ராதாகிருஷ்ணன்
18 தூத்துக்குடி – டி.பி..எஸ்.பொன் குமரன்  
19 திருநெல்வேலி- வெண்ணிமலை  
20 கன்னியாகுமரி – ஜெ.எபினேசர்
21 புதுச்சேரி - டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன்

MNM candidate list

வேட்பாளர் பட்டியலில் சிநேகன், ஸ்ரீபிரியா போன்றோருக்கு இன்னும் தொகுதி ஒதுக்கப்படவில்லை. ராமநாதபுரத்தில் கமல்ஹாசனும், தென் சென்னையில் நடிகை ஸ்ரீபிரியாவும்  நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios