மக்கள் பிரச்சினை குறித்து கேள்வி கேட்டா; தெர்மா கோல் பற்றி பேசி என்னையே ஓட்றாங்க - முன்னாள் அமைச்சர் பேச்சு

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை குறித்து ஏதாவது கேள்வி கேட்டால் தெர்ம கோல் பற்றி பேசி நம்மளத்தான் ஓட்டுறாங்க என மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு.

mla sellur raju slams cm mk stalin in madurai vel

அதிமுக 52ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான செல்லூர் ராஜூ தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது, குண்டுக்கே டாட்டா காட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர்.

சதுரங்க வேட்டை திரைப்படம் போல் முதல்வர் நம்மள ஏமாற்றுக்கிறார். வாரிசுக்கு கழகத்தில் இடமுண்டா என்ற கேள்விக்கு இந்த கழகம் சங்கர மடம் கிடையாது என்றார். அடுத்து நாளொரு மேனியும், ‌பொழுது ஒரு வண்ணமுமாக மகன், பேரன் என வந்து நம்மள ஏமாற்றுக்கிறார். இதை அப்பவே தலைவர் எம்ஜிஆர் சொன்னார்.

டாஸ்மாக் கடையை அகற்ற எதிர்ப்பு; தாராபுரத்தில் மது பிரியர்கள் மாபெரும் கடையடைப்பு போராட்டம்

இங்க வந்து ஸ்டாலின் பேசும்போது தெர்மக்கோல் இங்கு நிற்கிறார். அவரை எதிர்த்து பெண்ணை நிறுத்தியுள்ளதாக சொன்னார். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து 25 லட்சம் மக்களை தெருவில விட்டுட்டாங்க. அப்பவே எம்.ஜி.ஆர். முதியோர் பென்சன் நூறு ரூபாய் வழங்கினார். தலைவர் கொண்டு வந்த திட்டம் இப்பவும் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு கல்யாணம் ஆகவில்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் கொண்டு வந்த திட்டம் தொட்டில் குழந்தை திட்டம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கொள்கை என்பது வேஷ்டி. கூட்டணி என்பது தோளில் கிடக்கும் துண்டு. எப்ப வேணாலும் தூக்கி போடுவோம். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் நிறுத்தினீர்களே முதல்வரே இது நியாயமா? அண்ணா வளர்த்த கட்சியை இன்று குடும்ப கட்சியாக மாற்றிவிட்டனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் மின்கட்டணம் உயர்வு. அதனால் வீட்டு வாடகையை உயர்த்திட்டாங்க. இந்த ஆட்சியில் கமிஷன், கரப்சன் தான்.

அரியலூரில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு; மாட்டுக்கு தீவனம் அறுக்க சென்றபோது நேர்ந்த சோகம்

முதல்வர் ஸ்டாலின் அவரது அண்ணனுக்கு பயந்து 5 ஆண்டுகள் மதுரை பக்கமே வராமல் இருந்தார். பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் மதுரைக்கு வந்தார். பிடிஆர் உண்மையை சொன்னார். இன்று பல்லை பிடுங்கி இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார். ஒரு திட்டம் மதுரைக்கு இல்ல. அமைச்சர்கள் ராஜினாமா பண்ணிட்டு போங்க.

சட்டமன்றத்தில் ஏதாவது கேள்வி கேட்டா தெர்ம கோல் பற்றி பேசி நம்மளத்தான் ஓட்டுறாங்க. குடிநீர் பற்றி சட்டமன்றத்தில் பேசினா பெத்தானியாபுரம் பகுதியில் நான்கு குடி நீர் தொட்டிகள் கட்டியிருக்கிறாராம். நான்கு வார்டுக்கு மட்டும் போதுமா? நூறு வார்டுக்கும் தூய குடி நீர் கிடைக்க வேண்டாமா. அதற்கு தான் 1250கோடி ரூபாயில் முல்லை பெரியாறு கூட்டுகுடி நீர் திட்டம் கொண்டு வந்தார் எடப்பாடியார் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios