அரியலூரில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு; மாட்டுக்கு தீவனம் அறுக்க சென்றபோது நேர்ந்த சோகம்

அரியலூர் மாவட்டத்தில் மாட்டுக்கு தீவனம் அறுக்கச் சென்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

young woman killed by thunderstrom attack in ariyalur district vel

அரியலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் அரியலூர், தா.பழூர், வி.கைக்காடி, வாலாஜாநகரம்,  தாமரைக்குளம், ஓட்டக்கோவில், செந்துறை, வாரணவாசி, கீழப்பழுவூர் மற்றும் கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி செல்வி. இவர் தனது கணவருடன் மாட்டுக்கு தீவணம் அருக்க தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது வயலில் பயிரிடப்பட்டிருந்த சோளத்தை அறுத்து அதனை கட்டு கட்டி இருசக்கர வாகனத்தில் கணவர் நடராஜனை வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டு மீண்டும் சோளத்தை அறுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

ஓபிஎஸ் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்! கிரீன் சிக்னல் கொடுத்து அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா.!

இந்நிலையில் கீழையூர் பகுதியில் மாலை நேரத்தில் மழை பெய்து கொண்டிருக்கும் போது மழைக்கு ஓரமாக பனைமரம் அடியில் அமர்ந்துள்ளார். அப்பொழுது திடீரென இடி, மின்னல் தாக்கியதில் மரத்திற்கு அடியில் அமர்ந்து கொண்டிருந்த செல்வி மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் நீண்ட நேரம் ஆகியும் செல்வி வீட்டிற்கு வரவில்லை என்பதால் வயலுக்கு சென்று பார்த்து போது செல்வி மின்னல் தாக்கி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சடைந்தனர். பிறகு செல்வியை கீழப்பழுவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர் பரிசோதனை செய்ததில் செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது விபத்து அல்ல கொலைகள்.. உயிர் பலிக்கு முக்கிய காரணம் இதான்.. நாராயணன் திருப்பதி பகீர்..!

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கீழப்பழுவூர் போலீசார் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios