ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.3.25 லட்சம் கடனை சுமத்தியது தான் திமுகவின் சாதனை - உதயகுமார் சாடல்
தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.3.25 லட்சம் கடன் சுமையை ஏற்றியது தான் திமுகவின் 2 ஆண்டுகால சாதனை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்றைக்கு தமிழகத்தினுடைய தனிநபர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது என்று திமுகவின் இரண்டாண்டு சாதனையாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை.
ஒவ்வொரு குடும்பத்திலும் தனி நபர் வருமானம் 15 ஆயிரம் ரூபாய் மாதத்திற்கு வருவதாக சொல்கிறார். ஆனால் 30 நாட்களுக்கு முழுமையாக யாருக்கும் வேலை கிடைப்பதில்லை. 7.26 லட்சம் கோடி கடன் சுமையை ஏற்றி, இந்தியாவிலேயே அதிக கடன் சுமை உள்ள மாநிலம் தமிழகம் என்கிற ஒரு நிலையை இன்றைக்கு திமுக அரசின் நிர்வாகத்தாலே உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் இரண்டு கோடியே 18 லட்சம் குடும்பங்களின் ஒவ்வொரு தலையிலும் 3.25 லட்சம் கடனை வைத்திருப்பது திமுகவின் இரண்டாண்டு ஆண்டு சாதனையாகும். இந்தியாவிலே அதிக கடன் சுமை உள்ள மாநிலமாக உருவாக்கியது தான் திமுகவின் இரண்டாண்டு சாதனையாகும்.
விளையாட்டு துறையில் வருடத்திற்கு 100 பதக்கங்கள்; அதிகாரிகளுக்கு உதயநிதி கொடுத்த அசைன்மெண்ட்
கொடுத்த 520 வாக்குறுதிகளை காப்பாற்றாதது திமுகவின் இரண்டாண்டு சாதனை. மின்சார கட்டணத்தை உயர்த்தியது, பால்விலையை உயர்த்தியது, 30 ஆயிரம் கோடி கொள்ளை இராண்டாண்டு சாதனை. இதையெல்லாம் திசை திருப்ப எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல், படித்துக்கொள்ளாமல் பேசி இன்றைக்கு கோடிக்கணக்கான மக்கள் பல நூறு ஆண்டு காலமாக கடைபிடித்து வந்த அந்த தர்மத்தை அழிப்பேன், ஒழிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் பேச்சு அவருடைய நிலையை இன்றைக்கு உலகத்திற்கு எடுத்துக்காட்டுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
ராகுல் காந்தியின் நடைபயணம் தான் இந்தியா கூட்டணி உருவாக காரணம் - எம்.பி. ஜோதிமணி