திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸின் தனி பாதுகாப்பு காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக காவல்துறையினர் முழுமையாக களமிறங்கபட்டுள்ளனர். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள், சந்தைகள், வாகன சோதனை நடக்கும் செக் போஸ்ட்கள் போன்ற ரிஸ்க் நிறைந்த பகுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் நெருக்கடியால் போலீசாருக்கும் கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. 

அதேபோல், ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உயரதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மற்ற  காவலருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், மாநில அளவில் பாதிப்பு அதிகமாக உள்ள சென்னையில் பணியாற்றும் போலீசாரும் கொரோனா தொற்று அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது.  சென்னையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ளது. அதில், 200க்கும் மேற்பட்ட பேலீசார் அடங்குவர். 

இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸின் தனி பாதுகாப்பு காவலருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, எம்.எல்.ஏ. கருணாஸ் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.