தேர்தலுக்கு முன்பே பல்டியடிக்கும் மு.க.ஸ்டாலின்... ஆட்சிக்கு வந்தபின் எல்லாம் பொய்யாகுமா..? மக்கள் குழப்பம்.!
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்த மு.க.ஸ்டாலின் தற்போது பிறழாக பேசியுள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்த மு.க.ஸ்டாலின் தற்போது பிறழாக பேசியுள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் அனிதா என்கிற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதனை வைத்து பலரும் அரசியல் செய்து வந்த நிலையில் மேலும் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வந்தன. இந்நிலையில், ’’நீட்' தேர்வால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ கல்வி இடம் கிடைக்காத நிலை இருந்தது. இதையடுத்து, நடப்பு கல்வி ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டம் நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத்தின் படி, முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில், 399 எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில் திமுக இதனை விடாமல், தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சி அமைத்தால் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இடும் எனக் கூறப்பட்டு இருந்தது.
ஆனால், தற்போது அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் கூறி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதனைக் குறிப்பிட்டு நீட் தேர்வு ரத்து என வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை என்னவாயிற்று? தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தேர்தல் நடப்பதற்கு முன்பே இப்படித்தான் பல்டி அடிப்பதா? ஆட்சிக்கு வந்த பின் உங்கள் தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? உங்களை எப்படி நம்புவது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.