Asianet News TamilAsianet News Tamil

கடுப்பில் ஸ்டாலின்..VP.துரைசாமிக்கு எதிராக திமுக எடுத்த அதிரடி முடிவு? அதிருப்தி அதிரடிகளால் அதிரும் அறிவாலயம்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை கட்சித் தலைமைக்குத் தெரியாமல் வி.பி.துரைசாமி சந்தித்திருப்பது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்ப திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

mk stalin tension...DMK Notices Against VP duraisamy
Author
Tamil Nadu, First Published May 20, 2020, 5:11 PM IST

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை கட்சித் தலைமைக்குத் தெரியாமல் வி.பி.துரைசாமி சந்தித்திருப்பது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்ப திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி. இவர் சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். அண்மையில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி. சீட் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். அதிமுகவில் அருந்ததியின வகுப்பைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போல தனக்கும் எம்.பி. பதவி தர வேண்டும் என்று கேட்டார். ஆனால், கருணாநிதியால் தண்டிக்கப்பட்ட அதே வகுப்பைச் சேர்ந்த அந்நியூர் செல்வராஜூக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டது. அதேபோல், வி.பி.துரைசாமிக்குப் பதிலாக அந்தியூர் செல்வராஜ் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

mk stalin tension...DMK Notices Against VP duraisamy

இதனால், எம்.பி. சீட் வழங்கப்படவில்லை. அதேவேளை கட்சிப் பதவியும் பறிபோக இருக்கிறது என்பதால் வி.பி.துரைசாமி அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சென்னை கமலாயத்தில் சென்று தனது மகன், மருமகனுடன் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு  மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பாஜக தரப்பில் அறிக்கை வந்தாலும், இதில் அரசியல் காய் நகர்த்தல் இருப்பதாகவே கூறப்படுகிறது. ஏனென்றால், முருகன்,  வி.பி.துரைசாமி இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். முருகனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சந்திப்பு எனக் கூறினாலும், பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க நேரம் பெற்று தரும்கேட்டதாக கேட்டதாகவும், அது நேரம் பெற்று தருவதகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

mk stalin tension...DMK Notices Against VP duraisamy

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தபோது முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் தொடர்பான விவகாரத்தை விசாரித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இதுபோன்ற சூழ்நிலையில் கட்சித் தலைமைக்குத் தெரியாமல் முருகனை வி.பி.துரைசாமி சந்தித்திருப்பது திமுக தலைமையை கோபமடையச் செய்துள்ளது. இதனால், அவருக்கு  நோட்டீஸ் அனுப்ப திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios