Asianet News TamilAsianet News Tamil

ஆபரேஷன் சக்சஸ் நோயாளி அவுட்... அதிர்ச்சியில் திமுக..!

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 36 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இது அக்கட்சித் தலைமைக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.

MK Stalin Shock
Author
Tamil Nadu, First Published May 23, 2019, 11:13 AM IST

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 36 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இது அக்கட்சித் தலைமைக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. MK Stalin Shock

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்பட்ட 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் திமுக சோடை போயுள்ளது. இத்தொகுதிகளில் அதிக தொகுதிகளைப் பெற்று சட்டமன்றத்தில் பலத்தை நிரூபித்து எடப்பாடி ஆட்சியைக் கவிழ்ப்போம் என திமுக நிர்வாகிகள் பேசி வந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர் அதிமுகவில் வலுவான  தலைமை இல்லாததால் திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

 MK Stalin Shock

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரலாம் என்ற பேச்செல்லாம் வெளியாகின. ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகும் நிலையே தற்போதைய சூழலில் காணப்படுகிறது. 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 12 இடங்களிலும் அதிமுக 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மை பெறும் நிலை நிலவுகிறது. MK Stalin Shock

 இது திமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே கருதப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றிருக்கும் திமுக கூட்டணி, இடைத்தேர்தலில் அந்த அளவுக்கு சோபிக்க முடியாமல் போயிருப்பது அக்கட்சிக்கு நெருக்கடியையே தந்திருக்கிறது. ஏற்கனவே ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகவே சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தன் வலுவை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு திமுக தலைமைக்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios