நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜகவின் வெற்றியை சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் பறித்து சென்று ஆட்சி பிடித்தது.

ஆட்சி அமைத்தது காங்கிரஸ் என்பதால், பாஜகவை வீழ்த்தி, மூன்று மாநிலத்தில் வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தியே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். வலுவான இந்தியாவை உருவாக்கும் வல்லமை படைத்தவராகவும், வல்லமை படைத்த கட்சியாக காங்கிரஸ் உருமாறி உள்ளதற்கும் ராகுல் காரணம் என புகழாரம் சூட்டி உள்ளார்.


 
மேலும் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்ற தலைவர் ராகுல் காந்தி என புகழ்ந்து தள்ளி உள்ளார் ஸ்டாலின். மேலும், "மத வெறியின் பிடியில் இருந்து நாடு விடுபட்டு, ஜனநாயகம் மலர வேண்டுமானால் ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். பாசிசத்தை எதிர்த்து நின்று, ஜனநாயக படையினை ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தும் வலுவான தலைமை என்ற அடிப்படையில், ராகுல்காந்தியை முன் மொழிந்தது உள்ளதாக தமது அறிக்கையில் தெரிவித்து உள்ளார் திமுக தலைவர் முக  ஸ்டாலின்.