மக்களவை தேர்தலில் திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்த்தவர்களில் ராகுல்காந்தி குடும்பத்தினரை அடுத்து மிகுந்த ஏமாற்றமடைந்தது மு.க.ஸ்டாலின் குடும்பத்தினராகத்தான் இருக்கும். 

ராகுல்காந்தியை முதல்முறையாக பிரதமராக முன் மொழிந்தவரே மு.க.ஸ்டாலின் தான். ராகுல் காந்தி பிரதமர் பதவியேற்பது உறுதி என நினைத்து அவரிடம் தனக்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் அமைந்தன. குறைந்த பட்சம் ஆறு மத்திய அமைச்சர் பதவிகளை திமுக எம்.பி.களுக்கு பெற்றுத் தந்து விடவேண்டும் என்கிற திட்டத்தில் இருந்தார் மு.க.ஸ்டாலின். 

ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்கும் விழாவில் தனக்கு டெல்லியில் கொடுக்கப்படும் மரியாதையை தனது குடும்பத்தினர் கண்டு மகிழ வேண்டும் எனத் திட்டமிட்ட அவரது மருமகன் சபரீசன் தனி விமானத்தை தயார் செய்து வைத்திருந்தார். தமிழகத்தில் 38 இடங்களில் 37 இடங்களை அள்ளியது திமுக கூட்டணி. ஆனால் இந்திய அளவில் நிலைமை வடமாநிலங்களில் காங்கிரஸ் பாஜகவிடம் படுதோல்வி அடைந்தது. 

52 சீட்களை மட்டுமே பிடித்த காங்கிரஸ் கட்சியால் எதிர்கட்சி அந்தஸ்தை கூட எட்டிப்பிடிக்கமுடியவில்லை. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது பாஜக. மொத்தமாக 37 தொகுதிகளை கையில் வைத்திருந்தும் பதவிகளை பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது திமுக. இதனால், ராகுல் பதவியேற்பு விழாவிற்கு டெல்லி செல்ல புக் செய்யப்பட்டிருந்த விமானத்தை கேன்சல் செய்து விட்டாராம் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன்.