ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக குங்குமம் வைத்து அழிக்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

ஆந்திர மாநில முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார். விஜயவாடாவில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் ஆளுநர் நரசிம்மன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றபோது அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர். ஜெகனின் பதவியேற்பு விழாவில் அவரது தாயார் விஜயம்மா கலந்து கொண்டார்.

ஜெகனின் பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பெரும் மரியாதை வழங்கப்பட்டது. அந்த விழாவில்  அந்தர்கி வணக்கம் என தெலுங்கில் பேசி அசத்தினார் ஸ்டாலின்.

ஆனால், ஸ்டாலினை பக்கத்தில் இருந்து பார்த்த கே.சி.ஆரும், ஜெகன் மோகன் ரெட்டியும் அதிர்ந்து விட்டனர். காரணம் எப்போதுமே தன்னை நாத்திகராகக் காட்டிக் கொள்ளும் மு.க.ஸ்டாலின் தனது நெற்றியில் குங்குமம் திருநீர் வைத்துக் கொள்வதை விரும்பமாட்டார். ஆனால் இந்த விழாவில் நெற்றியில் தளைய தளைய குங்குமம் வைத்துக் கொண்டபடி மேடையில் பேசினார். பேசி முடித்தபின் ஜெகன் - கே.சி.ஆர் ஆகிய இருவரும் ஸ்டாலினின் நெற்றியை பார்த்து அதிர்ந்து விட்டனர்.