பேசுவது ஒன்று! வாழ்வது வேறு!...இதுதான் தமிழக அரசியல்வாதிகளின் சர்வலட்சணங்களில் மிக முக்கியமானது. மு.க. ஸ்டாலின் ஒன்றும் இதற்கு விதிவிலக்கில்லையே!?...என்று நறுக்கென ட்விட் தட்டிவிடுகிறார்கள் தமிழக அரசியல் விமர்சகர்கள். 

என்ன விவகாரம்?.... தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டு, வேட்பாளர் தேர்வும் முடிந்து எல்லாம் தயார். தங்களின் வேட்பாளர்கள் யார்? என்பதை இன்று ஸ்டாலின் அறிவிக்கிறார். இந்த நிலையில் தங்கள் கூட்டணியில் பா.ம.க.வுக்கான இருப்பை சட்டென அறிவித்து, இடங்கள் ஒதுக்கி ஜெட் வேகத்தில் பாய்ச்சல் காட்டிய எடப்பாடி, அதன் பிறகு ஸ்லோ டவுன் ஆனார். இன்று காலையில் ‘அ.தி.மு.க. போட்டியிடும் இடங்கள்’ அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள். அவர்கள் தரப்பிலும் வேட்பாளர்கள் பட்டியல் தயார். 

ஆனால் ‘ஸ்டாலின் வெளியிட்ட பிறகு நாம் வெளியிடுவோம்!’ என்று ஏதோ சில காரணங்களுக்காக வெயிட்டிங். இந்நிலையில் இன்று பட்டியலை அறிவிக்க இருக்கும் ஸ்டாலின் காலையிலிருந்து சைலண்டாக இருக்கிறார். பிற்பகல் உணவு நேரம் கடந்தும் எதுவும் டெவலப்மெண்ட் இல்லை! ஏன்? என்று எல்லோர் மனதிலும் கேள்விகள். 

இந்நிலையில் தமிழக அரசியல் விமர்சகர்கள் சிலர் சோஷியல் மீடியாக்கள் ஒரு கருத்தை தட்டிவிட்டு, வைரலாக்கி உள்ளனர். அது....”ஏன் உங்கள் தலைவர் இன்னும் பட்டியலை வெளியிடாமல் உள்ளார்? என்று அறிவாலய நபர்களிடம் கேட்டபோது, தலையை சொறிந்து கொண்டு ஹிஹி! என்று வழிந்தவர்கள் பின்னே ‘இன்னைக்கு மாலை 4:30 டூ 6 தானே ராகுகாலம்! அப்பதான் தளபதில் லிஸ்டை வெளியிடுவார்.’ என்கிறார்கள். இதைக் கேட்டதும் அப்படியே ஷாக் ஆகிட்டோம். 

ஆஹா பகுத்தறிவு பகலவன்! சமத்துவபுரம் தந்த இரண்டாம் பெரியார்! சிறுபான்மையினரின் காவலன்! இந்து சமய வழி வந்த பழக்கவழக்கங்களை மூடநம்பிக்கை என்று பெயரிட்டு எதிர்த்த நாத்திக பெரியோன் கருணாநிதியின் மகனும், இந்து திருமணங்களில் ஓதப்படும் மந்திரங்களின் அர்த்தம் அதை ஓதும் புரோஹிதருக்கே தெரியாது! என்று இஸ்லாமிய திருமண மேடையில் நின்று சூளுரைத்தவருமான ஸ்டாலின் எதற்கு வெயிட் பண்ணுகிறார் பாருங்கள்! வெளங்கிடும்ல?” என்று வெளுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த விமர்சனத்தை கிராஸ் செய்திருக்கும் தி.மு.க. நிர்வாகிகள் சிலரோ ”அபத்தமான விமர்சனம். ராகுகாலம், நல்ல நேரம் என்று எதற்கும் காத்திருக்கவுமில்லை! எமகண்டத்துக்கு பயப்படவுமில்லை! வழக்கமான பார்மாலிட்டிகள் முடிந்து வெளியிடப்படும்” என்று முட்டுக் கொடுத்துள்ளார்கள். ஆஹாங்!