காவிரியில் நீரைத் திறந்துவிடாமல் மேகதாதுவில் புதிய அணை கட்டினால்தான் தமிழகத்துக்கு நீர் என அணை கட்ட முயற்சிக்கிறது கர்நாடக அரசு, அதற்கு திரைமறைவில் உதவுகிறது மத்திய அரசு, இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி  கர்நாடக அரசின் செயலைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கை, அரசியல் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் துச்சமென மதிக்கும் செயலாக இருப்பதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரி இறுதித் தீர்ப்பின் படி தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டினால் தான் தண்ணீர் திறக்க முடியும். 

இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் விபரீத முயற்சி என்று கூறியுள்ள ஸ்டாலின், புதிய அணை கட்டும் முடிவினை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் மேகதாது அணை கட்ட சுற்றுச் சூழல் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அதனை தர முடியாது என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், காவிரியில் நீரைத் திறந்துவிடாமல் மேகதாதுவில் புதிய  அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு, மனிதாபிமானம் சிறிதும் இன்றி அடம் பிடிப்பதும், அதற்கு திரைமறைவில் உதவுகிறது மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி  கர்நாடக அரசின் செயலைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.