திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதியை தனக்கு அடுத்து  கட்சியில்  பவர்புல் லீடராக உருவாக்கும்  வேலைகளில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் இறங்கியுள்ளார்

தன் தந்தையைப் போலவும், தாத்தா கருணாநிதியைப்போலவும், அரசியலில்  பெரியளவில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், தான் உண்டு தன் சினிமா உண்டு என ஒதுங்கியே இருந்துவந்தவர் உதயநிதி ஸ்டாலின். திடீரென்று அவருக்கு  என்ன தோன்றியதோ தெரியவில்லை தந்தை ஸ்டாலினைப்போல்  தானும் அரசியலில் முக்கியமான தலைவராக வரவேண்டும் என முடிவு செய்தாரோ என்னவோ, சினிமாவிற்கு இடைவேலைகொடுத்துவிட்டு தீடீரென்று அரசியலில் குதித்துவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு நிகராக ஊர் ஊராக சென்று திமுகவுக்கும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் மிகத்தீவிரமாக பிரச்சாரம் செய்தார். திமுகவில் பல முன்னணி தலைவர்கள் பிரச்சாரம் செய்தாலும்  உதயநிதி ஸ்டாலின் அளவிற்கு அவர்களின் பிரச்சாரம் எடுபடவில்லை. பொதுமக்களுக்கு புரியும்படி மிக எதார்த்தமாக பேசி பிரச்சாரம் செய்தார் என்பது தான் அதற்கு காரணம்.இந்நிலையில் திமுகவில் எத்தனையோ பேர் ஆண்டுகணக்கில் கட்சிக்காக உழைத்து ஓடாய் போய் அங்கீகாரம் இல்லாமல் இருக்கும் நிலையில் கட்சியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளிலேயே உதயநிதி ஸ்டாலினுக்கு,  திமுகவில் மிக முக்கிய பதவிகளுல் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவியை வழங்கினார் ஸ்டாலின்

அடிமட்ட கட்சி தொண்டர் முதல் மாவட்ட செயலாளர் வரை அத்தனைபேரும் உதயநிதிக்கு பழக்கப்படாத வேண்டும், கட்சியின் கட்டமைப்புகளை புரிந்து கொள்ள உதயநிதிக்கு அது வாய்ப்பாக இருக்கும் என்பதால்தான் அவருக்கு  இளைஞரணி செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறார் ஸ்டானின் என்று சொல்லப்பட்டது. அதற்கேற்ப  இன்னும் ஒருசில தினங்களில் திமுக இளைஞரணி  கூட்டத்தை சென்னையில் தலைமேயேற்று நடத்த உள்ளார்  உதயநிதி ஸ்டாலின், அக் கூட்டத்தில் அவர் இளைஞர் அணி பொறுப்புகள் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது . 

அதேவேலையில் எப்போதும் உதயநிதியை பிசியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் , அவரை ஒரு முழுநேர அரசியல்வாதியக பெயரெடுக்க வைக்க வேண்டும் என்பதிலும் முக ஸ்டாலின் உறுதியாக இருந்துவருகிறார். எனவே இளைஞர் அணி கூட்டம் முடிந்த கையோடு தான் மேற்கொண்ட நமக்கு நாமே என்ற திட்டத்தைப்போல மகன் உதயநிதி ஸ்டாலினையும்   தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் அனுப்பி கட்சியில் முக்கிய தலைவராக்கும் முயற்ச்சியில் ஸ்டான் இறங்கியுள்ளார். எனவே  மாவட்ட செயலாளர்களுக்களை அழைத்து உதயநிதி சுற்றுபயணம் மேற்கொள்ள  ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டுள்ளார் எனவும் .சில முன்னணி தலைவர்களை அழைத்து உதயநிதிக்கு டூர் பிளான் போட்டுதரும்படியும்  ஸ்டாலின் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  கருணாநிதிக்கு பின் திமுக கட்சியை தான் கைப்பற்றியதைப்போல் தனக்குப்பின் தன் மகன் உதய நிதி வர வேண்டும் என்பதற்குதான் இத்தனை பிளான்களும்  என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.