திமுக பொதுச்செயலாளர் பதவியேற்க உள்ளார் துரைமுருகன் என அறிவித்ததால் உற்சாகமாக இருந்தவர் பொருளாளராக தொடர்வார்  என்ற அறிவிப்பு அவரை அதிருப்தியாக்கி விட்டது.

 

தி.மு.க.,வை ஆரம்பித்து 71 வருடங்கள் ஆகிறது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக அண்ணாதுரை, நெடுஞ்செழியன், அன்பழகன்னு மூன்றே பேர் தான், இதுவரை பொதுச்செயலாளராக இருந்துள்ளனர். இந்த மூவருமே முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு காலத்தில், எதிர்க்கட்சிகளால் 'முதலியார் கட்சி' என அழைக்கப்பட்ட தி.மு.க.வில் இப்போது அந்த சமுதாயத்தினருக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லை என முணுமுணுக்கப்படுகிறது. 

அதனால் துரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பதவியை கொடுக்காமல், முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தருக்கே கொடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகிறது. அதுவும் இல்லாமல் துரைமுருகனுக்கு காட்பாடியின் நிரந்தர எம்.எல்.ஏ., சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர், கட்சியில பொருளாளர் பதவி, அவரது மகனுக்கு எம்.பி., பதவிகள் நிறையவே கொடுத்தாயிற்று. 'ஒரே குடும்பத்துக்கு பதவிகளை தாரை வார்க்கக் கூடாது' என தி.மு.க., முன்னணி பிரமுகர்களே முணுமுணுக்கிறார்கள்.