தமிழகத்தில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சியில் அமர ஸ்டாலின் நினைப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்கெட்டால் அதற்கு ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் காவிரி விவகாரத்தை வைத்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசியல் செய்யப்பார்க்கிறது என்றார். 

தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு நிலை சீர்கெட்டால் அதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சியில் அமர ஸ்டாலின் நினைப்பதாக தமிழிசை கூறினார்.

ஆனால் அது நிச்சயம் நடக்காது என்ற தமிழிசை, காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் தேவையில்லாமல் பாஜக அரசை குற்றம் சாட்டுகிறார்கள் என்றார். உண்மையில் காவிரி விவகாரத்தில் தமிழகர்களுக்கு துரோகம் விளைவித்தது திமுகவும், காங்கிரசும்தான்.

சொல்லப்போனால் காவிரி விவகாரத்தில் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அனைவருமே குற்றவாளிகள்தான் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.