மகளிர் சுய உதவி குழுக்கள், தனிப்பட்ட முறையில் செல்வாக்குள்ள நபர்கள்,  பொதுச்சேவையாற்றி வருபவர்களை திமுக வளைக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்காக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் பணியாளர்கள் செல்வாக்குள்ள நபர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வளைத்து வருகிறார்கள். உங்களோடு இணைந்து செயலாற்ற தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பப்படுகிறார். உங்களுடன் பேச ஆசைப்படுகிறார் என தொலைபேசியில் ஆள்பிடிக்கும் வேலையை ஆரம்பித்துள்ளனர் ஐபேக் நிறுவன ஊழியர்கள்.

 

அதன் ஒருபகுதியாக திருநெல்வேலையை சேர்ந்த சேவா பாரத் அமைப்பை நடத்தி வரும் ஒருவரை தொடர்பு கொண்டு ஐபேக் அமைப்பு பேசியது அம்பலமாகி உள்ளது. அந்த தொலைபேசி உரையாடல் தற்போது கசிந்துள்ளது. அதில், ஐபேக் ஊழியர் உரையாடியதை அப்படியே தொகுத்துள்ளோம். ’’ சார் சேவா பாரத் திட்டத்தின் மூலமாக திருநெல்வேலி பகுதிகளில் நல்லது செய்து வருவது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளதாக கூறுகிறார்கள். மேலும், உங்கள் மூலமாக மக்களுக்கு நல்லது செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்வமாக உள்ளார். உங்களோடு நேரடி தொடர்பில் இருக்க தலைவர் விரும்புகிறார். உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? எனக் கேட்கிறார்.

அதற்கு பதிலளித்த பாரத் சேவா திட்டத்தை சேர்ந்தவர், ‘’இப்போதான் நல்லது செய்யுறவர்களை உங்க  தலைவருக்கு தெரியுதா? உங்க தலைவருடன் நேரடி தொடர்பில் இருக்க சத்தியமாக விரும்பவில்லை. நாங்க நல்ல காரியம் செய்து கொண்டிருக்கிறோம். ஆகையால் நல்லவர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு தான் விரும்புவோம். மு.க.ஸ்டாலின் நல்லவர் கிடையாது, அவர் முழுமையான தேச துரோகி. அவரோடு எந்த காலகட்டத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்ப மாட்டோம். இப்படியெல்லாம் மக்களிடம் பேசி, அவரை பில்டஃப் செய்து அவரை நல்லவரை போல காட்ட முயலாதீர்கள்.

அவர் கொடுக்கிற சம்பத்திற்காக இப்படியெல்லாம் நடந்து கொள்ளாதீர்கள். யாரிடம் வேலை செவது என்பதற்கு வரைமுறைகள் இருக்கிறது. எதற்காக சம்பளம் வாங்குகிறோம் என தெரிந்து பேசுங்கள். இப்படிப்பட்ட கேவலமான வேலையை செய்து ஸ்டாலினை தூக்கிப்பிடித்து கேவலமான வாழ்க்கையை வாழாதீர்கள். ஸ்டாலின் முழுக்க முழுக்க தேச விரோத செயலை செய்து கொண்டிருக்கிறார். இந்து மத துரோகியாக ஸ்டாலின் இருக்கிறார். நீங்களும் அவருக்கு துணை போய் நாட்டை காட்டிக் கொடுத்து விடாதீர்கள்’’ என பதிலடி கொடுத்துள்ளார். இதனால் திக்குமுக்காடிப்போன ஐபேக் ஊழியர் பதில் சொல்ல வார்த்தைகளின்றி தவிப்போடு லைனை கட் செய்துள்ளார்.