சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் ஸ்டாலின் 2-ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை கடந்த மார்ச் 9-ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார். இந்நிலையில், கொடைக்கானலில் 6 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின் இன்று காலை 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை காவேரி மருத்துவமனையில்  செலுத்திக் கொண்டார். 

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;- இரண்டாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசி இன்று எடுத்துக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும்.

வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும் நம்மையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.