திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் திறமையற்றவர் என்று அன்றே சட்டப்பேரவையில் உரத்த குரலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைச்சுவை கலந்த கதையுடன் கூறியது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு சின்ன பையன் தன் தந்தையிடம் சென்று அப்பா எனக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடு என்றான். உடனே தந்தை தனது மகனை பார்த்து மகனே அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில், தந்தை, தனையன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடமில்லை. வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உணது அரசியல் பாடத்தை நீயேதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். தந்தை சொல்லை மகன் கேட்கவில்லை. அரசியல் பாடத்தை கற்பதில் பிடிவாதமாக இருந்தார். மகன் தந்தையே உங்களை பார்த்து நான் அரசியலில் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றான். வேறுவழியின்றி தந்தையும் மகனுக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுக்க சம்மதித்தார். 

மகனை அழைத்து ஓடிப்போய் ஒரு ஏணி எடுத்துக்கொண்டு வா என்றார். எதற்கு ஏணி என்று கேட்டான் மகன். இப்படியேல்லாம் கேட்டக்கூடாது, நான் சொல்வதை செய்ய வேண்டும் என்றார் தந்தை. மகன் ஏணியை எடுத்துக்கொண்டு வந்தான். இந்த சுவற்றிலேயே ஏணியை சாய்த்து வைய், பிறகு ஏணியின் மீது ஏறி உச்சுக்கு செல். மேலே பறனையில் நான் என்னென்ன ஏமாற்று வேலைகளை செய்து அரசியலில் நிலைத்து நிற்கிறேன் என்பதை பற்றி நெஞ்சை திறந்து எழுதி வைத்துள்ளேன். அரசியல் பற்றி அனைத்து பாடங்களும் அவற்றில் உள்ளன. அதை கற்றுத்தேர்ந்தால் நீயும் அரசியலில் பெரிய ஆளாக ஆகலாம் என்றார். 

அப்பா நான் ஏணியிலே ஏறி மேலே போகிறேன். நீ கீழே இருந்து ஏணியை கேட்டியாக பிடித்துக்கொள் என்றான் மகன். அதை பற்றி நீ கவலைப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் தந்தையார். மகன் மெதுவாக ஏணியின் மேலே போனான். அவன் உச்சுக்கு போனதும் தந்தை ஏணியின் மேல் இருந்த கையை எடுத்துவிட்டார். ஏணி சரிந்து விழுந்தது. மகனும் கீழே விழுந்துவிட்டான். வலி தாங்க முடியாமல் இடுப்பை பிடித்துக்கொண்டே எழுந்தான் மகன். 

என்னப்பா இப்படி ஏணியில் இருந்து கையை எடுத்துவிட்டாயே, உன்னால் தான் எனக்கு இடுப்பில் இப்போ அடிப்பட்டிருக்கிறது என்று கூச்சலிட்டான். தந்தை சிரித்துக்கொண்டே எல்லாவற்றையும் நீ இப்போதே தெரிந்துகொண்டால் என்னை யார் மதிப்பார்கள் என்று கேட்டார். இதுதான் அரசியலில் முதல் பாடம் என்று தெரிந்துகொண்ட மகன். அப்பனாக இருந்தாலும் நம்பக்கூடாது, நம்மை நாமேதான் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான். சரி எவ்வளவு தூரம் தான் இவன் தன்னை வளர்த்து கொள்கிறான் என்று பார்ப்போம் என நினைத்த தந்தை சிறிது விட்டு பிடித்து பின்னர் மகனுக்கு கடிவாளம் போட்டுவிட்டார். அரசியல் எவ்வளவு ஆபத்தானது என்பதற்காக தான் நான் இந்த கதையை இங்கு கூறினேனே தவிர நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பள்ள என நகைச்சுவை கலந்த கதையுடன் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்தார்.