கனா காணும் சுடலைக்கு கம்பி எண்ணும் நிலைமை வரும் என்கிற தலைப்பில்  கட்டுரை வெளியிட்டுள்ள நமது அம்மா நாளிதழ், ‘’திமுக ஆட்சிக்கு வந்தால் இன்றைய அமைச்சர்கல் எல்லம் சிறைக்கு போவார்கள் என்று திமிர் வாதம் பேசுகிறாரே ஸ்டாலின்.

அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பன் ஆவதும், இனி திமுக ஆட்சிக்கு வந்து பழிவாங்க நினைப்பதும் ஒன்று தான். ஆனால், திமுகவினர் அடுத்தடுத்து ப.சிதம்பரத்தின் பாதத் தடத்தில்  திகார் சிறைக்கு போகக் காத்திருப்பது மட்டும் நிச்சயமாக நடக்கப்போகிற ஒன்று. 

அதனால், தங்களுக்கு நிகழப்போவதை அறியாமல் பிறரை பழிவாங்குவோம் என்று பிதற்றி திரிகிற ஸ்டாலின் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய  சாஹித் உஸ்மான் பல்வாவை சந்தித்து 2315 கோடி ரூபாயை கருணாநிதி  தொலைக்காட்சிக்கு கடனாக வாங்கி வந்தேன் எனு கப்சா விட்டதும், அந்த விபரத்தை சி.பி.ஐயிடம் வாக்குமூலமாக கொடுத்த பெரம்பலூர் சாதிக் மறுவாரமே மர்மமாக செத்துப்போனதும் விசாரணை வளையத்துக்குள் வரும்போது திருவாளர் சுடலையுமே விரைவில் கம்பி எண்ணுகிற காலம் வரத்தான் போகிறது. 

நிலைமை இவ்வாறு இருக்க வாக்குகளால் வீழ்த்த முடியாத அனைத்திந்திய அண்ணா திமுகவையும் வீழ்த்தலாம் என்று கருணாநிதி புத்திரர் கனா காண்கிறார் என்றால் அதனை நினைத்து பரிதாபப்படுவது அன்றி வேறென்ன சொல்வது?’எனத் தெரிவித்துள்ளது.