மு.க.ஸ்டாலினால் இந்த ஜென்மத்துக்கும் முதல்வராக முடியாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் பங்களாதேஷில் இருந்து ஊடுருவிய ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக திமுக எம்.பிக்கள் 38 பேரும் ஆதரித்து ஓட்டுப்போட்டு இருக்கிறார்கள். 
குடியுரிமைக்கு எதிரான தேசப்பற்றாளர்கள் இவர்கள் இல்லை என நாட்டுப்பற்றாளர்கள் இவர்களை தாக்க ஆரம்பித்தால் நாடு என்னவாகும்? ஆகவே ஸ்டாலின் போன்று மிக மோசமான சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளை மக்கள் வைக்கிற இடத்தில் வைத்திருக்கிறார்கள். ஸ்டாலினால் ஜென்மத்துக்கும் முதல்வராக முடியாது. நல்ல எண்ணம் இருந்தால் தானே. வன்முறையாளர்களை கட்டவிழ்த்து விடுகிறார். 

சிந்தாதிரிப்பேட்டையில்  சிஏஏ என பேனாவில் பிரிண்ட் செய்து விற்றால் முஸ்லீம் பயங்கவாதிகள் அந்தக் கடையை ப்போய் தாக்கி இருக்கிறார்கள். அதற்காக ஏழுபேரில் மூன்று பேரை கைது செய்து இருக்கிறது காவல்துறை. இன்னும் 4 பேரை கைது செய்யவில்லை. அதற்காக முஸ்லீம் குண்டர்கள் கைதுசெய்யப்பட்ட மூன்று பேரை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டம் நடத்துகிறார்கள். என்ன அயோக்கியத்தனம் நடக்கிறது தமிழகத்தில். இது என்ன நாடா இல்ல காடா? அதேபோல் வடசென்னையில் சிஏஏவுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்கள் கொடுத்தவர்கள் முஸ்லீம்களால் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். 

அதேபோல சிஏஏவுக்கு ஆதரவாக செயல்பட்ட பாலக்கரை பாஜக பகுதி செயலாளர் விஜய் ரகு முஸ்லீம்களால் கொல்லப்பட்டு இருக்கிறார். பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிக்கும் பாதுகாப்பில்லை. காவல்துறைக்கும் பாதுகாப்பில்லை.  வில்சன் களியக்காவிளையில் கொல்லப்பட்டார். யார் அதில் ஈடுபட்டவர்கள்’’ என குற்றம்சாட்டியுள்ளார்.