உங்களுக்கு கொடுக்கிற பழக்கம் கிடையாது, பண்பாடும் கிடையாது, உங்க பரம்பரைக்கே கிடையாது. கொடுக்கிற கட்சி அண்ணா திமுக. அதை கெடுக்குற கட்சி திமுக என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,ம்  ‘’காணொலி காட்சியில் உட்கார்ந்துகிட்டு வடநாட்டு வாத்தியார் பிரசாந்த் கிஷோர் எழுதிக் கொடுத்த அந்த துண்டுச்சீட்டை பார்த்து படிக்கிறார். ஸ்டாலினிடம் திரும்ப என்ன படித்தீர்கள் என்று கேளுங்கள். அவருக்கு அவர் பேசியதே தெரியாது. நீங்கள் யாரை பற்றி பேசினீர்கள் என நீங்க திரும்ப கேளுங்கள். நான் எங்கே அவரை பற்றி பேசினேன் எனத் திரும்ப கேட்பார். ஊழலைப் பற்றி பேசக்கூடிய யோக்கியதை ஸ்டாலினுக்கு கொஞ்சம் கூட கிடையாது. திமுக கட்சிக்கே கிடையாது. 1976ல் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக கட்சி. கலைத்தது யார்? காங்கிரஸ் கட்சி. அன்றைய காங்கிரஸ் கட்சி பிரதமர் இந்திரா காந்திதான். இன்றைக்கு அந்த காங்கிரஸ் தான் ஸ்டாலினையும் முதலமைச்சராக்கப் போவதாக சொல்கிறது. ஒருக்காலும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது.

அம்மாவுடைய ஆட்சி, எடப்பாடி ஆட்சி தான் மீண்டும் 2021ல் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் பேசுவதெல்லாம் எல்லாம் பொய், புளுகு, பித்தலாட்டம். திருக்குவளையில் உங்களுக்கு இருந்த சொத்து என்ன? உனக்கு இப்போது ஏன் இவ்வளவு சொத்து? எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார் என்று ஓபன் ஸ்டேட்மென்ட் விடு. திருக்குவளையில் இருந்து திருட்டு ரயில் ஏறித்தான் வந்தார் உங்க அப்பா. அப்போது டிக்கெட் ஐந்து ரூபாய். ஐஞ்சு ரூபாய் ரயில் டிக்கெட் எடுக்க காசில்லாம் சென்னைக்கு வந்த கலைஞர் குடும்பம், இன்று லட்சம் கோடிக்கு அதிபதி. ஸ்டாலின் வேளச்சேரியில் நீச்சல் குளத்தோடு வீடு கட்டியிருக்கிறார். பங்களாவின் மதிப்பு தெரியுமா? உங்க அப்பா இறந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. ’’நான் இறந்த பிறகு கோபாலபுரம் இல்லம் மருத்துவமனை ஆகும்’’என்று சொன்னாரே. அதற்கு ஏதாவது ஸ்டெப் எடுத்து இருக்கிறாயா? உங்களுக்கு கொடுக்கிற பழக்கம் கிடையாது, பண்பாடும் கிடையாது, உங்க பரம்பரைக்கே கிடையாது. கொடுக்கிற கட்சி அண்ணா திமுக. அதை கெடுக்குற கட்சி திமுக’’ எனக் கூறினார்.