தற்போது ஆட்சியிலுள்ள மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. மே 23-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, விடிவு காலம் பிறக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

உழைப்பாளர்களின் தியாகத்தையும், வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் முதன் முதலாக தொழிலாளர் தினம் 1923-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்நிலையில், மே தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொ.மு.ச. பேரணி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டார். இதில் மே தின பேரணியில் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் சிவப்பு ஆடையுடன் கலந்துகொண்டனர். 

இதனையடுத்து சிதம்பர நகர் மைதானத்தில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தற்போது ஆட்சியிலுள்ள மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. தொழிலாளர் தோழர்களுக்கும், விவசாயிகளுக்கும் மே 23-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, விடிவுகாலம் வரும் எனவும் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின், மே 1-ம் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தது, கருணாநிதியின் திமுக அரசு தான் என்று பெருமையுடன் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

வழக்கமாக வெள்ளைச்சட்டை அணியும் ஸ்டாலின் அவ்வப்போது அவரது அப்பாவுக்கு பிடித்த மஞ்சள் கலர் டீசர் அணிவார். சில தருணங்களில் கருப்பு கலர் சட்டை அணிந்து கொள்வார். அதைத் தாண்டி பிற கலர் ஆடைகளை அவர் அணிவது அறிது. இந்நிலையில் மே-1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிகப்பு கலர் சட்டை அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.