அறிவாலயத்தில் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என அவசரகூட்டம் நடத்தும் இந்த நேரத்தில்,   முக அழகிரி தனது முகநூல் பக்கத்தில்,  ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அமைதியாக இருந்த அழகிரி திடீர் என முகநூலில் பதிவிட்டுள்ளதால், தனது ரீ என்ரிக்கு நாள் குறித்துள்ளதாக அஞ்சா நெஞ்சனின் ஆதரவாளர்கள் அதகலபடுத்த தயாராகி வருகிறார்கள்.

 தமிழக அரசியல் வரலாற்றில் வேறு யாராலும் ஈடு செய்ய முடியாத திமுக தலைவர் கருணாநிதியின்  மறைவிற்கு பிறகு, கருணாநிதியின் மகன் முக அழகிரி  மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கவுள்ளதை முகநூலில் அம்பலமாக்கியுள்ளார். திமுக பொதுக்குழு கூடும் இந்த நேரத்தில், அழகிரி ரிலீஸ் செய்தது மக்கள் மத்தியில் கேள்வி எழும்பி இருக்கிறது.
 கருணாநிதியின் திருவாரூர் தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள தொகுதிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள்  இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இடைதேர்தல் குறித்து  பேசுகையில் அழகிரியிடம் கலைஞரின் திருவாரூர் தொகுதியை பொறுப்பேற்க்குமாரு சிலர் கேட்டிருக்கின்றனர். கருணாநிதியை இழந்து வருத்தத்தில் இருக்கும் அழகிரி, அப்பாவின் மரணம் நிகழ்ந்து சில தினங்களுக்குள்ளேயே இது போன்ற முடிவுகள் எடுப்பதில் தனக்கு இப்போது விருப்பம் இல்லை என தெரிவித்திருக்கிறார்.

அதே சமயம் தனக்கு திருவாரூர் தொகுதி மீது அதிக ஈடு பாடு இல்லை என்பதையும் தெரிவித்த அவர், நமக்கு தான் எப்போதும் திருப்பரங்குன்றம் இருக்கிறதே என தன்னுடைய விருப்பத்தை சூசகமாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால அவரின் இந்த விருப்பத்திற்கு ஸ்டாலின் எந்த பதிலும் இதுவரை கூறியதாக தெரியவில்லை


இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர். பாலு, பொன்முடி, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வரும் 14ஆம் தேதி திமுகவின் அவசர செயற்குழு கூடவுள்ள நிலையில்  தற்போது ஆலோசனை நடைபெறுகிறது.

அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ பதிவுடன், தற்போது புதிய கருத்தை சொல்ல விரும்பும் அரசியல் வாதியாகவும், அரசியல் களத்தில் மீண்டும் கலக்க வரும் ஹீரோ போன்ற வாசகங்கள் அடங்கிய பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளைதில் பரவலாக பகிரப்பட்டு  வருகிறது.  "இனி ஆட்டத்தை பாருடா... அதிரடியை பாருடா....  தடுக்குறவன் யாருடா.,....வேணா ...சொன்னா கேளுடா.....வேற மாரி ஆளுடா ....அண்ண தொட்டதெல்லாம் தூள்டா... ரசிகனை ரசிக்கும் தலைவா...வெற்றிமுகம் வா...... சிங்கத் தமிழா....சங்கத்தமிழா...உச்சம் தொட வா...... மக்கள் செல்வன் வா... இன்னும் உச்சம் தொட வா..."  என்ற பாடல் வரிகளுடன் தொடங்குகிறது. இந்த வீடியோ காட்சிகள் திமுக வட்டாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அறிவாலயத்தில் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என அவசரகூட்டம் நடத்தும் இந்த நேரத்தில்,  முக அழகிரி தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அமைதியாக இருந்த அழகிரி திடீர் என முகநூலில் பதிவிட்டுள்ளதால், தனது ரீ என்ரிக்கு நாள் குறித்துள்ளதாக அஞ்சா நெஞ்சனின் ஆதரவாளர்கள் அதகலபடுத்த தயாராகி வருகிறார்கள்.