நான் நினைத்தை முடிப்பேன்; நினைத்ததை சாதிப்பேன்; திமுகவில்  நிலைமை மாறும் போது நான் யாரென்று துரோகிகளுக்கு காட்டுவேன் என்று மு.க.அழகிரி பேசி தன்னுடைய ஆதரவாளர்களை ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி தன்னுடைய ஆதரவாளரும், மதுரை மாவட்ட நீதிமன்றம் சங்கத்தலைவருமான மோகன் குமார் இல்லத் திருமணத்தில் தன்னுடைய பிறந்த நாள் கேக் வெட்டி தொண்டர்களுடன் மகிழ்ச்சியை கொண்டாடியிருக்கிறார். 

அழகிரி தன்னுடைய விசுவாசிகள் யாரையும் மறந்தது இல்லை. அவர்கள் எங்கு இருந்தாலும் தன்னுடைய மனைவியோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர்களின் குடும்ப விழாக்களின் அவர்கள் திமுகவிற்கு என்ன செய்தார்கள் அவர்களின் உழைப்பு என்ன என்பதை அந்நிகழ்ச்சியில் உணர்ச்சி பூர்வாகமகவும், சில நேரங்களில் நக்கலாகவும், நகைச்சுவையாகவும் பேசுவார். 

அதேபோல் தான் மோகன்குமார் இல்லத் திருமணத்தின் போது பேசியதாவது..." திமுகவின் கொள்கைபரப்பு செயலாளராக இருந்த சுப்புலெட்சுமி ஜெகதீசன் மதுரை மத்திய சிறையில் இருந்த போது அவரை கவனித்துக் கொண்டவர் மோகன்குமார். அவர் மறந்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். மறப்பது என்பது இப்போது சாதாரணமாகி விட்டது. 

அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.கள் எல்லாம் எனக்கு வணக்கம் வைத்து விட்டு பேசுகிறார்கள். ஆனால் என் கூட பழகியவர்களே என்னி பேச மறுக்கிறார்கள். யாரோ சிலர் மட்டும் கலைஞ்ரோட பிள்ளை அல்ல. நானும் கலைஞர் பிள்ளை தான். எப்போது நிலைமை மாறப்போகிறது என்று தெரியவில்லை. அப்போது தெரியும். நான் எதையும் செய்ய கூடியவன். நினைத்ததை முடிப்பவன். இதுவும் அவர்களுக்கு தெரியும். என எச்சரிக்கும் தொனியில் பேசியிருக்கிறார்.