மீண்டும் திமுகவில் ரீ என்ட்ரி கொடுக்கப் போகும் மு.க.அழகிரி? செய்தியாளர்கள் கேள்விக்கு அதிரடி சரவெடி பதில்..!
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே அமைதியாக இருந்து வருகிறார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து தமிழக அரசியல் களத்தை அதிரவைத்தார்.
உதயநிதியை சந்தித்தது எல்லையில்லா மகிழ்ச்சி. அவரை சிறு வயதில் இருந்து எனக்கு தெரியும். அவர் அமைச்சர் ஆனது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே அமைதியாக இருந்து வருகிறார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து தமிழக அரசியல் களத்தை அதிரவைத்தார். மேலும், பாஜகவில் இணைய போவதாகவும் தகவல் வெளியானது. அப்போது குடும்ப உறுப்பினர்கள் அழகிரியிடம் சமாதானப் பேச்சு நடத்தினர். இதனை தொடர்ந்து அழகிரி சைலண்ட் மோடில் இருந்து வந்தார். அவ்வப்போது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இதையும் படிங்க;- ஆசையாக பெரியப்பா மு.க அழகிரி வீட்டுக்கு போன உதயநிதி! மதுரையில் திடீர் சந்திப்பு.. குஷியில் உடன்பிறப்புகள் !!
இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று தொடங்கி வைப்பதற்காக நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்திருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக அவரது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தனது பெரியப்பாவான அழகிரியை முதல் முறையாக அவர் சந்தித்துள்ளார். அவரை வரவேற்க வீட்டு வாசலில் மு.க அழகிரி காத்திருந்து வரவேற்றார். பெரியப்பா உதயநிதியின் நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றார்.
இதையும் படிங்க;- ராமஜெயம் கொலை வழக்கு: குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை; நாளை உண்மை கண்டறியும் சோதனை
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மு.க.அழகிரி;- பெரியப்பாவை பார்க்க என் தம்பி மகன் வருகிறார் என சிரித்துக்கொண்டே பதிலளித்தார். அமைச்சர் அன்பில் மகேஷூம் எனக்கு இன்னொமு மகன் தான். உதயநிதியை சந்தித்தது எல்லையில்லா மகிழ்ச்சி. அவரை சிறு வயதில் இருந்து எனக்கு தெரியும். அவர் அமைச்சர் ஆனது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் மீண்டும் திமுகவில் தொடர்ந்து செயல்படுவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என புன்னகை முறுவல் தெரிவித்தார்.