ராமஜெயம் கொலை வழக்கு: குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை; நாளை உண்மை கண்டறியும் சோதனை
கடந்த 2012ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்ட அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகப்படும் ரௌடிகளிடம் நாளை முதல் வருகின்ற 21ம் தேதி வரை உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள சிபிசிஐடி காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோரரான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த ராமஜெயத்தின் உடலை கல்லணை பகுதியில் இருந்து காவல் துறையினர் மீட்டனர். இச்சம்பவம் நடைபெற்று சுமார் 11 ஆண்டுகளான நிலையில், கொலையில் ஈடுபட்ட நபர்கள் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.
“காளைகளுக்கும், வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல்” உறுதி மொழியுடன் தொடங்கிய பாலமேடு ஜல்லிகட்டு
சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே தற்போது வரை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், முக்கிய கொலை வழக்குகளில் தொடர்புடைய ரௌடிகளை கணக்கெடுத்த காவல் துறையினர், இவர்களில் சம்பவத்தன்று திருச்சி சுற்றுவட்டாரத்தில் இருந்த 13 ரௌடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.
அதன்படி நாளை (17ம் தேதி) முதல் வருகின்ற சனிக்கிழமை (21ம் தேதி) வரை இந்த 13 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. இதற்காக இவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று நம்பப்படுகிறது.
மது போதையில் சாலையில் தள்ளாடிய நபர்; லாரி சக்கரத்தில் சிக்கி பலி
இது ஒருபுறம் இருக்க, சந்தேகப்படும் ரௌடிகளின் வழக்கறிஞர்களோ, அமைச்சர் கே.என்.நேருவின் குடும்பத்தினரையும் இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி நேருவின் குடும்ப உறுப்பினர்களிடமும் இந்த சோதனை மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.