மது போதையில் சாலையில் தள்ளாடிய நபர்; லாரி சக்கரத்தில் சிக்கி பலி
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மதுபோதையில் தள்ளாடியபடி நடந்து சென்றுகொண்டிருந்த நபர் நிலைத் தடுமாறி கீழே விழுந்த நிலையில், லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வீரா. மது போதைக்கு அடிமையான இவர், தினமும் மது அருந்திவிட்டு சாலையில் படுத்து உறங்குவதையே வழக்கமாகக் கொண்டவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை இவர் மது போதையில் அப்பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு அமர்ந்துள்ளார்.
“காளைகளுக்கும், வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல்” உறுதி மொழியுடன் தொடங்கிய பாலமேடு ஜல்லிகட்டு
சிறிது நேரம் கழித்து எழுந்து நிற்க முற்பட்டுள்ளார். ஆனால் மது போதையின் உச்சத்தில் இருந்த வீரா நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று வீரா மீது வேகமாக ஏறி, இறங்கியுள்ளது. இதில் உடல் நசுங்கிய வீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காதலன் கண்ணெதிரே பலியான காதலி… சாலையை கடக்க முயன்றபோது நேர்ந்த சோகம்!!
விபத்து நடைபெற்றப் பகுதியில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், வீரா மீது லாரி ஏறி இறங்கிய விபத்து பதிவாகி உள்ளது. இந்நிலையில், விபத்து குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.