மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாணவி அனுக்ரீத்தி வாஸ், இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப்
பெற்றார்.

பெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி அனுக்ரீத்தி வாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். போட்டியின் இறுதியில்
சென்னையைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அனுக்ரீத்தி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விக்கு மிக அழகாக பதில் கூறிய அவர், "Be Yourself" என்ற சொல்லை தான் அவர் அதிகமாக
பயன்படுதினார். எந்த கேள்வி கேட்டாலும் முதலில் நாம் நாமாக இருக்க வேண்டும் என சிரித்துக்கொண்டே பதில் கூறினார்.

மிஸ் வேர்ல்ட் முடிந்த உடன் நான் மீண்டும் என்னுடைய படிப்பை தொடர்வேன் என்றும் எந்த அளவிற்கு மிஸ் வேர்ல்டாக முயற்சி செய்து மிகவும்
விருப்பத்துடன் கலந்துக் கொண்டேனோ அதே அளவுக்கு படிப்பும் எனக்கு பிடிக்கும் அனுக்ரீத்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அனுக்ரீத்தி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை, தலைமைச்செயலகம் வந்த
அனுக்ரீத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூக்கூடை கொடுத்து வாழ்த்தினார்.