சென்னை கிரீன்வேல்ஸ் இல்லத்தில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, அன்பழகன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.

ஆனால் பன்னீர்செல்வத்தை திடீரென பதவியில் இருந்து விலகும்படி சசிகலா உத்தரவிட்டதால் அவர் கட்சியை உடைத்தார்.

அவருக்கு  12 எம்எல்ஏக்கள், 12 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் மீதம் உள்ள 123 எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் முதல்வர் பதவி எடப்பாடியிடம் சென்றது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அதிமுக டிடிவி கட்டுப்பாட்டுக்குள் சென்றதால் ஆட்சியை கைப்பற்ற விரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி அமைச்சரவை டிடிவி எதிராக செயல்பட ஆரம்பித்தது.

இதைதொடர்ந்து எடப்பாடி பன்னீருடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார். ஆனால் பன்னீர் அணியோ நீண்ட நாட்களாக பிடிகொடுக்க வில்லை.

மத்திய பாஜகவோ இரு அணிகளும் இணைய வேண்டும் என வற்புறுத்தி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் இரு அணிகளும் விரைவில் இணையும் என இரு தரப்பும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் எடப்பாடி அணியை சேர்ந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், வேலுமணி, கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் சென்னை கிரீன்வேல்ஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.