MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • திமுக ரூ.5000..! அதிமுக ரூ.5000..! ஒவ்வொரு வீட்டுக்கும் காஸ்ட்லி கிஃப்ட்... மக்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

திமுக ரூ.5000..! அதிமுக ரூ.5000..! ஒவ்வொரு வீட்டுக்கும் காஸ்ட்லி கிஃப்ட்... மக்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்குள் மொத்த தொகுதிகளுக்கும் பரிசு பொருட்களை வினியோகிக்கிற முடிவில் திமுக அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 02 2026, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கிஃப்டுகளை வாரி வழங்கும் திமுக
Image Credit : Asianet News

கிஃப்டுகளை வாரி வழங்கும் திமுக

திமுகவின் வழக்கப்படி, ஆட்சியின் கடைசி நேரத்தில், தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் தொகுதி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொறுப்பாளர்கள், பெண்களுக்கு தனித் தனியாக கிஃப்டுகளை வாரி வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்து திக்குமுக்காட வைத்து வருகிறார்கள்.

தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3000 வழங்கப்பட்டது. அதேவேளை திமுக எம்.எல்.ஏ-க்கள் சார்பில் அவர்களது தொகுதிக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் கிஃப்டுகளை வாரி வழங்கினர். கடந்த பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்ட போதும் ‘ரொக்கப் பணம்’ கொடுக்கவில்லை. ஆனால், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதையொட்டி பொங்கல் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை வாயிலாக ரூ.3000 வழங்கப்பட்டது. திமுக எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கல் சார்பில் தங்களது தொகுதிக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் கிஃப்டுகளை வாரி வழங்கினர்.

24
ரூ.5000 மதிப்புள்ள ‘கிஃப்ட் பெட்டி’
Image Credit : Asianet News

ரூ.5000 மதிப்புள்ள ‘கிஃப்ட் பெட்டி’

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு விலையுர்ந்த சமையல் குக்கர், சர்க்கரை, நெய், கரும்பு உட்பட பொங்கல் தொகுப்பை கூப்பன்களை கொடுத்து வாரி வழங்கி கொடை வள்ளல் தனத்தை காட்டினார். அதேபோல, திமுகவின் சீனியர் அமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு பொங்கலுக்கான கிஃப்ட் வழங்கப்பட்டது. தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு கொடுத்து வருகிறது. அதை வாங்கிவிட்டுச் செல்பவர்களுக்கு அக்கடையின் அருகிலேயே ரூ.5000 மதிப்புள்ள ‘கிஃப்ட் பெட்டி’ கொடுக்கப்பட்டது.அந்த பெட்டியில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும், தட்டு, குக்கர் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருந்தது.

Related Articles

Related image1
மண மேடையை மாற்றிக் கொண்ட ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா... திருமண நாளில் திடீர் ட்விஸ்ட்..!
34
 ‘எலெக்சன் கிஃப்ட்’
Image Credit : Asianet News

‘எலெக்சன் கிஃப்ட்’

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அவர்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு தங்களது சொந்தப் பணத்தில் கிஃப்டை கொடுத்து வருகின்றனர். 2026ம் ஆண்டு திமுக எம்.எல்.ஏ-க்கள் தரப்பால் கொடுக்கப்படும் ‘எலெக்சன் கிஃப்ட்’ என்ற குதூகலத்துடன் வாங்கிச் செல்கிறார்கள் பொது மக்கள். தேர்தல் நெருங்கும் நிலையில் இன்னும் நிறைய கிஃப்ட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

44
களத்தில் இறங்கிய அதிமுக
Image Credit : Asianet News

களத்தில் இறங்கிய அதிமுக

பல அமைச்சர்கள் அவர்களது தொகுதியில் இருக்கிற மக்களுக்கு ரொம்ப காஸ்ட்லியான கிப் பாக்ஸ்களை சர்பிரைஸ்ஸாக அவரவர் வீட்டுக்கே கொண்டு போய் கொடுத்து வருகிறார்கள். குறிஞ்சிப்பாடி, புவனகிரி, ஆத்தூர், மதுரை மேற்கு தொகுதியில் அண்டா, ஹாட் பாக்ஸ், மிக்ஸி என தரமான ஐட்டங்கள் கொடுக்கப்படுகிறது. இந்த பொருட்களை எல்லாம் அரசு ஒப்பந்ததாரர்களை அமைச்சர்களுக்காக வாங்கி கொடுப்பதாக சொல்றார்கள். இதை தடுக்க முடியாமல் தலைமைக்கு தகவல் சொல்லி புலம்பும் அதிமுக முன்னாள் அமைச்சர்களோ, தங்களுடைய தொகுதிகளுக்கு பரிசு கொடுக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்குள் மொத்த தொகுதிகளுக்கும் பரிசு பொருட்களை வினியோகிக்கிற முடிவில் திமுக அமைச்சர்கள் இருக்கும் நிலையில் அதிமுகவை சேர்ந்த ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் என சில பேர் பரிசு பொருட்களை வாங்கி கொடுக்க துவங்கி இருக்கிறார்கள்.

About the Author

TR
Thiraviya raj
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
மண மேடையை மாற்றிக் கொண்ட ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா... திருமண நாளில் திடீர் ட்விஸ்ட்..!
Recommended image2
அதிமுக தனிக்கட்சி அல்ல; பாஜகவின் கிளை அமைப்பு.. போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
Recommended image3
Union Budget 2026: திருந்தாத மத்திய அரசு..பாஜகவை விளாசிய ராகுல் காந்தி.. நிர்மலா சீதாராமன் பதிலடி!
Related Stories
Recommended image1
மண மேடையை மாற்றிக் கொண்ட ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா... திருமண நாளில் திடீர் ட்விஸ்ட்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved