ரெண்டு மாசங்களுக்கு ஒரு தடவை ரகளையான, ரவுசான பஞ்சாயத்தில் சிக்கிக் கொள்ளவில்லை என்றால் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, சுத்தமா தூக்கமே வராது. அடுத்தடுத்து வருமான வரித்துறை ரெய்டில் சிக்கினார்! பிறகு, ‘நான் ஆஸ்பிடல் போனா டாக்டர், வேட்டியை மடிச்சு கட்டி களமிறங்கினா...’ என்று பஞ்ச் டயலாக் விட்டு பரபரப்பானார்.

இப்போதோ அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்கையில் ‘ரிவிட் அடிக்கணும்’ என்று பேசி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். 


கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கூடவே உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் ஆகியோர் இருந்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கான வார்டுகளுக்கு சென்று  பார்வையிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், அங்கே வார்டுகள் முறையாக பராமரிக்கப்படாததை பார்த்து டென்ஷனாகியிருக்கிறார். மேலும் மருத்துவ மேம்பாட்டு பணிகள் குறித்து சில கேள்விகள் கேட்டபோது அவருக்கு சரியான பதில்கள் கிடைக்கவில்லை. இதுவும் அமைச்சரை உஷ்ணப்படுத்திவிட்டது. 

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரிக்கு போன் போட்டவர், “மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பெறப்படும் நிதி குறித்து ஆயுவு நடத்த ஸ்பெஷல் டீமை ஏற்ப்படுத்துங்க. இன்ஸூரன்ஸ் பிளான் மூலம் ஒழுங்கா நிதி உருவாகுறதுமில்லை, அதை ஒழுங்கா பயன்படுத்துறதும் இல்லை. இதையெல்லாமே ஆடிட் பண்ணனும். ஏன்னா நிதி முறைகேடா பயன்படுத்துற மாதிரி தெரியுது. 

அனைத்து மருத்துவமனை ‘நோடல் அலுவலர்களையும் வரவழைத்து ஒரு ரிவிட் அடிக்கணும். நான் சொல்லியிருக்கிறதுல பல விஷயங்களை தணிக்கை பண்ணுங்க, தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை எடுங்க.” என்று மளமளவென பொரிந்து தள்ளியிருக்கிறார். 

அமைச்சரின் இந்த அதிரடி ஒரு பக்கம் ஆச்சரியமூட்டினாலும் கூட ‘ரிவிட் அடிக்கணும், முறைகேடு நடந்திருக்கு!’ என்று அமைச்சர் வெளியிட்டிருக்கும் வார்த்தைகளுக்குதான் கொதிப்பு ரியாக்‌ஷன்களை காட்ட துவங்கியிருக்கின்றனர் சுகாதார துறை ஊழியர்கள்.

 ‘இது கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கான பிரச்னை இல்லை. டோட்டல் தமிழக சுகாதார துறை அலுவலர்களுக்கான பிரச்னை. அதனால ஒன்று பட்டு போராடி, அமைச்சரின் சர்வாதிகார வாய்பேச்சை அடக்குவோம்!’ என்று பொங்கியிருக்கின்றனர். 
சர்தான்