துணைமுதல்வராகும் உதயநிதி? முன்மொழிய, வழிமொழியத் தொடங்கிய அமைச்சர்கள்
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராக வேண்டும் என்ற கருத்தை வழிமொழிவதாக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதல் முறையாக சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே பொறுப்பில் உள்ள பல்வேறு அமைச்சர்கள் குரல் எழுப்பத் தொடங்கினர்.
அரசு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு பரிசு வழங்கிய முதல்வர்; அகவிலைப்படி 38% உயர்வு
இதனைத் தொடர்ந்து அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு உதயநிதி அமைச்சராக்கப்பட்டார். அமைச்சர் பொறுப்பை ஏற்ற பின்னர் திண்டுக்கல், கோவை, திருச்சி என பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
6வது நாளாக உண்ணாவித போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்; குழு அமைக்க முதல்வர் உத்தரவு
சமீபத்தில் அமைச்சர் உதயநிதியை துணைமுதல்வராக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளிப்படையாக பேசினார். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வடுகபாலையம் பகுதியில் சிறுவர் பூங்கா, அரசு மருத்துவமனையில் காத்திருப்போர் அறையை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். அப்போது உதயநிதி துணைமுதலமைச்சராக வேண்டும் என்று கூறிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராக நான் வழிமொழிவதாக தெரிவித்துள்ளார்.