ஐபிஎல் போட்டியை பார்க்க பாஸ் கோரிய எஸ்.பி.வேலுமணி... சுவாரஸ்ய பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

ஐபிஎல் போட்டிகளை காண அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் பாஸ் வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 

minister udayanidhi stalin gave an interesting reply to sp velumani regarding ipl pass

ஐபிஎல் போட்டிகளை காண அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் பாஸ் வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சேர்ந்த எஸ்பி வேலுமணி, அதிமுக ஆட்சியின் போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: நோ சீட்.! பல்டி அடித்த பாஜக தலைவர்.. அண்ணாமலை போட்ட ட்வீட் - கர்நாடக தேர்தலில் அதிரிபுதிரி

தற்போது திமுக ஆட்சியிலும் 400 பாஸ் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் எங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கு டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். விளையாட்டுத்துறை அமைச்சர் போட்டிகளை பார்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: வேலை,வெட்டி இல்லாமலா சட்டமன்றம் வந்திருக்கிறோம்..! சட்டப்பேரவையில் அமைச்சருக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி

இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான்கு வருடமாக ஐபிஎல் சென்னையில் நடைபெறவில்லை. நீங்கள் எந்த மேட்சுக்கு பாஸ் வாங்கிக் கொடுத்தீர்கள் என்று தெரியவில்லை. ஐபிஎல் போட்டியை நடத்துவது உங்களுடைய நெருங்கி நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தான். நாங்கள் கேட்டால் தரமாட்டார்கள். அவரிடம் பேசி ஒரு எம்எல்ஏக்கு 5 டிக்கெட் வாங்கி கொடுங்கள். நீங்கள் கேட்டு வாங்கி கொடுத்தால் காசுக் கூட கொடுத்து வாங்கிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios