நோ சீட்.! பல்டி அடித்த பாஜக தலைவர்.. அண்ணாமலை போட்ட ட்வீட் - கர்நாடக தேர்தலில் அதிரிபுதிரி
கர்நாடகா தேர்தலில் போட்டியிட பாஜகவில் மூத்த பாஜக தலைவர்களுக்கு இடம் மறுக்கப்படுவதால், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது.
மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார். இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க..சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை.. அங்க தமிழர்களே இல்லை.!! பாமக கிளப்பிய சர்ச்சை !!
ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கிறது. அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது. கர்நாடகா பாஜக மூத்த தலைவரான ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை பாஜக கட்சியினர் வரவேற்றுள்ளனர். இளைய தலைமுறைக்கு வழிவிடுவதாக கூறினாலும், உண்மை அது இல்லை என்று கிசுகிசுக்கப்படுகிறது.
கர்நாடகா பாஜகவில் மூத்த பாஜக தலைவர்களுக்கு இடம் மறுக்கப்படுவதால், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் நாளைதான் முதல் பட்டியல் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குஜராத மாடலில் மூத்தவர்கள் ஒதுக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பல்டி அடித்துள்ளார். அதுமட்டுமின்றி மகனுக்கு சீட் கிடையாது என்று தலைமை கூறியதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட தமிழக பாஜக தலைவரும், கர்நாடக தேர்தல் பொறுப்பாளரும் அண்ணாமலை, “ பாஜவினர் எப்போது கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்களிப்பதில் நம் அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்குவதற்காக தான்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..திருப்பூரில் தயாரான பிரதமர் மோடியின் டீ சர்ட்..இதை கவனிச்சீங்களா.? அப்படி என்ன ஸ்பெஷல்.!!