சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை.. அங்க தமிழர்களே இல்லை.!! பாமக கிளப்பிய சர்ச்சை !!
தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்யவேண்டும் என்று சட்டப்பேரவையில் பாமக வேண்டுகோள் விடுத்துள்ளது.
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 31 ஆம் தேதி தொடங்கியது. 12 நகரங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் சென்னையும் ஒன்றாகும். இந்த ஆனது சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஐ.பி.எல் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் விளையாடுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை சார்பாக கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய பாமகவை சேர்ந்த தர்மபுரி எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று பரபரப்பு கோரிக்கையை வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஐபிஎல் தொடரில் தமிழகம் சார்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் என விளையாடி வரும் அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும், தமிழகத்தில் சிறந்த வீரர்கள் இருந்தும் அவர்கள் விளையாட அனுமதிப்பதில்லை. தமிழக வீரர்களை ஒதுக்கிவிட்டு, சுய லாபத்திற்காக மட்டுமே தமிழக அணி போல விளம்பரப்படுத்தி தமிழர்களிடம் இருந்து அதிக லாபம் சம்பாதித்து வருகிறது.
எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என பாமக சார்பில் சட்டப்பேரவையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பாமகவின் கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தமிழக அரசு இதுகுறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..திருப்பூரில் தயாரான பிரதமர் மோடியின் டீ சர்ட்..இதை கவனிச்சீங்களா.? அப்படி என்ன ஸ்பெஷல்.!!
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?