Asianet News TamilAsianet News Tamil

"பதவியை ராஜினாமா செய்வேன்...!!!" - புருடா விடும் ஆர்.பி.உதயகுமார்...

minister udayakumar says that he will going to resign
minister udayakumar says that he will going to resign
Author
First Published Jun 9, 2017, 10:35 AM IST


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்காவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆர்.பி.உதயகுமார். இவர் சசிகலா குடும்பத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

ஏற்கனவே, சூளூர் கனகராஜ், அம்மன் அர்ஜுனன், செந்தில்பாலாஜி உள்பட பல எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி பிரச்சனையை தீர்க்காவிட்டால் தனது பதவிரயை ராஜினாமா செய்துவிடுவோம் மிரட்டி வந்தனர். இந்த நிலையில் சசிகலா ஆதரவு அமைச்சர் இப்படி கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

minister udayakumar says that he will going to resign

ஸ்டண்ட் அடிப்பதில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என எப்போதும் நிரூபித்து வருபவர்தான் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார். இது அனைவரும் அறிந்தது விஷயமே.

ஜெயலலிதா இருந்த போயஸ் தோட்டம், ஆட்சி செய்த கோட்டை வளாகம் ஆகிய இடங்களில் செருப்பு அணிந்து செல்ல மாட்டேன் என முதலில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலா முதலமைச்சர் ஆகும் வரை தாடியை எடுக்கமாட்டேன்  என தொலைக்காட்சியில் பேட்டியும் அளித்தார்.

மேற்சொன்ன இரண்டு வாக்குகளில் எதையும் அவர் முழுமையாக பின்பற்றவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

அதிமுக ஓபிஎஸ், சசிகலா அணி என பிரிவதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை உடனடியாக ராஜினமா செய்ய வேண்டும் என முதலில்ல குரல் கொடுத்தவர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

minister udayakumar says that he will going to resign

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவும், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரனும் சிறைக்கு சென்றனர். அதன்பின்னர், எடப்பாடி தலைமையில் இருந்த அணியும், ஓ.பி.எஸ். அணியும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடந்தது.

இதையடுத்து, ஓ.பி.எஸ்.சை மாண்புமிகு மற்றும் அண்ணன் என கூறிவந்தார். தற்போது தினகரன் ஜாமீனில் சிறையில் இருந்து வந்த பின்னர், அனைத்து எம்எல்ஏக்களும் அவரை சந்தித்து வருகின்றனர்.

ஆனால், அமைச்சர்கள் இதுவரை யாரும் செல்லவில்லை. இதனால், இருதரப்பும் எதிரும் புதிருமாகவே உள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்காவிட்டால், தனது பதவியை ராஜினாமா செய்வேன் என கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சசிகலாவின் தீவிர ஆதரவாளரான ஆர்.பி.உதயகுமார், இதுவரை டிடிவி.தினகரனை சந்திக்காமல் இருப்பதும், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியிருப்பதும் அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்னவென்று புரியாமல் அனைவரும் திகைத்து உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios